இடுகைகள்

முருகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதரவற்றோருக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவளிக்கும் கோவை முருகன்! - நிழல் மையத்தின் அன்னதான சேவை

படம்
  1992ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தோற்றுப்போன சோகத்தில் மூன்றுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தார் அந்த மாணவர். அனைத்தும் தோற்றுப்போன சோகத்தில் அப்படியே சாலைகளில் திரிந்தார். கோவையின் சிறுமுகைப் பகுதயில் பிச்சைக்காரர்களோடு  உட்கார்ந்திருந்தார். படிப்பில் தோற்றாகிவிட்டது. இனி என்ன எதிர்காலம் கண்ணில் உள்ளது என்றும் அவருக்கு தெரியவில்லை.  மனதில் துக்கம் இருப்பதால் வயிறு பசிக்காமல் இருக்குமா? வயிறு கபகபவென எரியத் தொடங்கியது. அங்கு வீடில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருமே சோறு கிடைக்காமல் அதற்காக அங்கு வருபவர்களிடம் கை நீட்டிக்கொண்டிருப்பவர்கள்தான். அப்போது மாணவரைப் பார்த்த கருப்பன் என்ற பெரியவர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிட்டார். பிறகு அங்கிருந்து சில ஆண்டுகளில் லாரி க்ளீனராக மாறினார். 1998இல் ஆட்டோவை வாடகைக்கு வாங்கி ஓட்டத் தொடங்கினார்.   மனம் வாடி பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து சோற்றுக்கு ஏங்கியபோது அந்த மாணவரின் மனதில் இருந்தது ஒன்றுதான். நாம் நல்ல நிலைக்கு வந்தால் இதுபோல வீடில்லாதவர்களுக்கு, மனநிலை தவறியவர்களுக்கு சோறு போட வேண்டும். நம்மால் முடிந்தவர

சூழல்களுக்கு அஞ்சாத விவசாயி! விழுப்புரம் இயற்கை விவசாயி முருகன்

படம்
  பாரம்பரிய நெற்பயிர் ரகங்கள், விழுப்புரம் விழுப்புரத்தில் உள்ளது அய்யூர் அகரம் கிராமம். இங்கு உள்ளே நுழைந்ததும் ஆச்சரியப்படுத்துவது, தூய்மையான புத்துணர்ச்சியான காற்றுதான். ஒருபுறம் சிறுவீடுகள், நேரான குறுகலான தெருக்கள், ஹாரன்களை அடித்தபடி செல்லும் இருசக்கர வாகனங்கள் என்ற காட்சிகளை பார்க்கலாம். இன்னொரு புறம் அழகான பச்சை பசேல் என்ற விவசாய நிலங்களும் கண்களை கவருகின்றன.  இங்குதான் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களை விவசாயம் செய்து வருகிறார் விவசாயி முருகன் கே. அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் வயல்கள் நீரில் த த்தளித்து இப்போதுதான் மெல்ல அதிலிருந்து மீண்டு வருகிறது.  பருவச்சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக சரிசெய்வது கடினம். வேதிப்பொருட்களை தவிர்த்துவிட்டுத்தான் இயற்கை விவசாயத்தை இனி அனைவரும் செய்யத் தொடங்கவேண்டும். அனைவரும் இப்படி விவசாயம் செய்யத் தொடங்கினால் அடுத்த தலைமுறைக்கு எந்த பிரச்னையும் வராது என்றார் இவர்.  பூங்கார், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, சொர்ணமயூரி, இப்பு சம்பா ஆகியவற்றை நான் நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறேன் என்றார் முருகன்.  முப்பது ஆண்டுகளாக தன

தூக்குத்தண்ட்னைக் கைதியின் பழிவாங்கும் படலத்திற்கு உதவும் காக்கை சித்தர்! சிவரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                சிவரகசியம்   இந்திரா சௌந்தர்ராஜன் பூமிக்காத்தான் பட்டியில் கோவிலுக்குள் அமைந்திருக்கிறது ஊர் . இங்கு பௌர்ணமி தோறும் சித்தர்கள் பூஜை செய்து வருகிறார்கள் ரசமணீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பால் ஊரில் மழை வளம் குறைவதில்லை . தினமும் மழை பெய்கிறது . அங்குள்ள சிவ வனத்தில் சித்தர்கள் வாழ்கின்றனர் . இந்தசெய்தி காண்டீபன் என்ற பத்திரிகையாளர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு கூற , வில்சன் எனும் ஆராய்ச்சியாளர் அங்கு வருகிறார் . இதனால் நேரும் விளைவுகள்தான் கதை . இதன் உப கதைகளாக தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி ராமண்ணா , பூமிக்காத்தான் பட்டியில் தொழிற்சாலை தொடங்கும் அர்ஜூன் ஆகியோர் கதை வருகிறது . தூக்குதண்டனை கைதி கதை மட்டுமே சுவாரசியமாக உள்ளது . மற்ற இரு கதைகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை . நாவலின் இன்னொரு பலவீனம் . கதையில் தொடக்கத்தில் கூறும் தகவல்கள் . சித்தர்கள் பற்றிய தகவல்களை ஆசிரியர் கூற நினைத்திருக்கிறார் . அதற்காக இன்னொரு புத்தகம் எழுவதும் அளவுக்கு தகவல்களை குவிப்பார் என்பதை வாசகரும் எதிர்பார்த்திருக்கமுடியாது . ஒருகட்டத்தில் இந்த தகவல்களைப் படித்தவிட்ட

தைப்பூசத்தை விடுமுறை நாளாக அறிவிக்க பக்தர்களின் வேண்டுகோள்தான் காரணம்! - முதல்வர் பழனிசாமி

படம்
  நேர்காணல் முதல்வர் பழனிசாமி நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணி அரசியலைப் பின்பற்றுகிறீர்களா? அதிமுகவின் பொதுசெயலாளராக விளங்கிய அம்மா யாருடனும் ஒப்பிட முடியாதவர். நாங்கள் அவர் வகுத்த நலத்திட்டங்களை அப்படியே தொடர்கிறோம். அவரைப் போல சிறந்த தலைவரை நாங்கள் கண்டதில்லை. எங்கள் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும்.  ஜெயலலிதாவை உங்கள் வழிகாட்டி என்று சொல்லுகிறீர்களா? கண்டிப்பாக. அவரின் தலைமைத்துவ வழிகாட்டலில் நான் நிறைய ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் காரணமாகவே நான் இன்று முதல்வராகி மக்களுக்காக அவரது வழியிலேயே செயல்பட்டு வருகிறேன். அவரது ஆளுமை பிரமாண்டமானது. நான் அவரை எனது வழிகாட்டி என பெருமையுடன் கூறிக்கொள்ளுகிறேன்.  நீங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமருவோம் என்று நினைத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. ஆனால் அது அதிமுகவில் சாத்தியமாகிற ஒன்றுதான். இங்கு கீழ்நிலையில் உள்ளவராக இருந்தாலும் கூட எம்எல்ஏ, எம்பி, முதல்வர் என்று படிநிலையை எட்டிப்பிடிக்க முடியும். இது மன்னர் பரம்பரை சார்ந்த கட்சி கிடையாது.  பிற முதல்வர்கள் செய்யாத