இடுகைகள்

சிறந்த நூல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த கட்டுரை நூல்கள் 2019!

படம்
அயர்லாந்தில் செய்யப்பட்ட கொலை, அதன்பின்னர் அந்த நாட்டை எப்படி இங்கிலாந்துக்காரர்கள் ஆக்கிரமித்தனர், அங்கு வாழ்ந்த மக்களின் நிலை என நேர்த்தியாக விளக்கி எழுதியுள்ள நூல் இது. அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா புயலை எத்தனை பேருக்குத் தெரியும்? கத்ரீனா கைஃபை தெரிந்தவர்களை விட குறைவுதான் அல்லவா. அந்த புயலில் வீட்டை இழந்தவர் எழுதிய நினைவுக்குறிப்புதான் இந்த நூல். பாசமும், பாதுகாப்பும் தந்த வீட்டை இழந்தபோது அவர் அடையும் துயரம் நமக்கே நேர்வது போல இருக்கிறது. தன் கதையின் வழியாக நியூ ஓர்லியன்ஸ் நகரின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார். பூமியில் மனிதர்கள் உருவாக்கி விண்ணுயரும் கட்டிடங்களுக்கு சளைக்காத கட்டுமானங்களை பூமிக்கு அடியிலும் உருவாக்கியுள்ளனர். எழுத்தாளர் ராபர்ட் அதைத்தான் தேடிப்போய் அந்த அனுபவங்களை நூலாக செதுக்கியிருக்கிறார். தன் சொந்த அனுபவங்களை இழைத்து அதில் ஓரினச்சேர்க்கையின் மோசமான பிரச்னைகளை குழைத்து வித்தியாசமான மொழியில் நூலை எழுதியுள்ளார்.அதற்காகவே நீங்கள் நூலை வாங்கிப்படிக்கலாம். எழுத்தாளர் ஹார்ப்பர் லீ, திடீரென ஒரு கதையை எழுதுவதாக சொல்லி பின்னர