இடுகைகள்

ஆஸ்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் வாழ்க்கையைக் காக்க தன்னை கறைப்படுத்திக்கொள்ளும் மகன்! - தி பவர் ஆப் டாக் - ஜேன் கேம்பியன்

படம்
  தி பவர் ஆஃப் டாக் தி பவர் ஆப் டாக் ஜேன் கேம்பியன்  1925இல் நடைபெறும் கதை. நியூசிலாந்தின் மான்டனா நகரில் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. பில், ஜார்ஜ் என்ற இரு சகோதரர்களின் கதை. இருவருக்கும் தொழிலே மாடுகளை மேய்ப்பதுதான். இதற்கென குதிரைக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி செல்லும் வாழ்க்கையில் ஜார்ஜ், உணவகம் நடத்தும் பெண் ஒருவரைக் காதலித்து மணம் செய்கிறார். இது பில்லுக்கு பிடிப்பதில்லை. முன்னமே உணவகப்பெண், அவரின் மகன் ஆகியோரை கடுமையாக கேலி செய்தவன் பில்.  இப்படியிருக்கும் நிலையில் பில்லின் வீட்டுக்கே உணவகப் பெண் வர, இருவருக்கும் இடையிலான உறவுச்சிக்கல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.  பெனடிக் கும்பர்பச், படம் நெடுக வெறுப்பை உமிழும் மனிதராகவே வருகிறார்.இவர்தான் பில். தனது சகோதரர், உணவகப்பெண்ணை மணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து குதிரையை ஆக்ரோஷமாக அடிப்பார். படம் நெடுக்க வெறுப்பும், கோபமுமாக காட்சிகளில் வரும் வெயில் பார்வையாளர்களின் மனதில் வரும்படி நடித்திருக்கிறார்.  கிர்ஸ்டன் டன்ஸ்ட் தான் உணவகப் பெண். இவர் குடிபோதைக்கு அடிமையாகி தவித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் பில் செய்யும் கேலிகளால்

ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்ப ஓராண்டுக்கு வேலை பார்க்கவேண்டும்! - தயாரிப்பாளர் குனீத் மோங்கா

படம்
            குனீத் மோங்கா இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த குனீத் மோங்கா முக்கியமான தயாரிப்பாளர் . இவர் தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன . வேறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களையும் , புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த தயங்காதவர் . எப்படி வேறுபட்ட மையப்பொருளைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் ? எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது . அதற்காகவே அதை மையப்பொருளாக கொண்ட தஸ்விதனியா என்ற படத்தை தயாரித்தேன் . எனது சிக்யா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான பொருளே , அர்த்தமுள்ள கதைகள் என்பதுதான் . நான் இதற்கு முன்னர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துள்ளேன் . அங்கு ஏராளமான மாறுபட்ட கதைகளைப் பார்த்துள்ளேன் . பல படங்களை இப்படி தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளோம் . இப்படித்தான் பெட்லர்ஸ் , ஹராம்கோர் , லன்ச்பாக்ஸ் ஆகியவை உருவாயின . இதில் தோல்விகளும் உண்டு . எனக்கு இத்துறையில் வழிகாட்டவென எந்த குழுவும் கிடையாது . உதவிக்காகத்தான் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டீர்களா ? மூன்று ஆண்டுகள் என்னை நானே என்ன ச

பாலின பேதமற்ற விருது- பெர்லின் திரைப்பட விருதுவிழாவில் ஆச்சரியம்!

படம்
  பெர்லின் திரைப்படவிழாவில் வரலாற்றில் முதன்முறையாக பாலின பேதமற்ற விருது நடிகை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஐம் யுவர் மேன் என்ற படத்தில் நடித்த நடிகை மாரன் எகெர்ட் இந்த விருதை வென்றுள்ளார்.  இந்த  பாலின பேதமற்ற பிரிவில் விருது வழங்குவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அறிவிக்கப்பட்டது. தற்போது விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஆண்கள், பெண்கள் அனைவரும் போட்டியிடலாம் என்பது இதன் சிறப்பு. ஆனால் எப்போதும் போல இதற்கும் சரியா, தவறா என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. கேட்பிளான்கேட், டில்டா ஸ்விண்டன் ஆகியோர் இந்த விருது வழங்கும் முயற்சியை வரவேற்றுள்ளனர். சிலர் இது பாலின பேத பிரச்னையை பெரிதாக்கும் என்று கூறியுள்ளனர்.  பாலினம் சார்ந்த நடைபெறும் பிரச்னைகள் பற்றிய விவாதத்தை  இந்த விருது ஏற்படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம் என மேரியட் ரைசன்பர்க் கூறியுள்ளார். இவர் பெர்லின் விருதுப்போட்டியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.  ஆஸ்கர், பாஃப்டா, எம்மி என உலகம் முழுக்க நிறைய விருது வழங்கும் போட்டிகள் உள்ளன. இவை அனைத்துமே ஆண்கள், பெண்கள் என பிரித்துதான் விருதுகளை வழங்குகின்றன. இவை அனைத்துமே ஒ

நடிப்பை விட தனிப்பட்ட வாழ்க்கைக்காக அதிகம் பேசப்பட்ட ஆங்கிலப்பட நடிகர்! லியனார்டோ டிகாப்ரியோ

படம்
      டிகாப்ரியோ டிகாப்ரியோ டக்ளஸ் விட் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட லியனார்டோ டி காப்ரியோவின் வாழ்க்கைக் கதை. ஜெர்மனை மூதாதையர்களாக கொண்டவர் லியோ. அவரின் ஹிப்பி அப்பா, உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அம்மா என இருவருடனும் வந்து அமெரிக்காவில் லியோ எப்படி ஜெயித்தார் என்பதுதான்  நூலின் முக்கியமான பகுதி. பால்ய வயதில் லியோ பல்வேறு டிவி தொடர்களில் நடித்து சம்பாதித்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்துதான் கொஞ்சம் நல்ல சூழல் கொண்ட வீட்டுக்கு மாறுகிறார். அவரின் இயல்பு, பள்ளியில் நடந்துகொள்ளும் விதம், டிவி ஆடிஷன்கள் , அவரின் அப்பா பற்றிய லியோவின் உணர்வுகள் என  நிறைய விஷயங்களை பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானா லியோ பேசிய பதிவுகள் அனைத்தும் ஊடகங்கள் வந்தவைதான் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 அத்தியாயங்கள்.. குடும்பத்திற்கான வருமானமே லியோவின் நடிப்பு மூலம் கிடைக்கிறது. 1995க்குப் பிறகு லியோவின் வாழ்க்கை முறையே மாறுகிறது. டைட்டானிக் படம் வந்தபிறகு அவரின் சினிமா மார்க்கெட்டும் உயருகிறது. இந்த நூல் லியோவின் நடிப்பை மதிப்பிடுவதை விட ஆஸ்கர் விருதுக்கான் ஆசையை அதிகம் பேசியுள்ளத