இடுகைகள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலைப் புரிந்துகொள்வது எப்படி? - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  தென் தேர் இஸ் லவ் இலவச நூலில் இருந்து… ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம் ஒரு உறவில் பாதுகாப்பைத் தேவையாக நினைக்குப்போது அது பயத்தையும் சோகத்தையும் உருவாக்குகிறது. பாதுகாப்பைத் தேடும்போது அது, பாதுகாப்பின்மையை அழைத்து வருகிறது. உங்கள் உறவுகள் எதிலாவது பாதுகாப்பைத் தேடியுள்ளீர்களா? நம்மில் பெரும்பாலானோர்   காதலிக்க, காதலிக்கப்பட என்ற வகையில் ஒருவகை பாதுகாப்பை விரும்புகிறவர்கள். உண்மையில் ஒருவருக்கொருவர் காதலிக்கிற சூழ்நிலையில் அந்த காதல் இருவருக்குமான பாதுகாப்பைக் கொண்டிருக்கிறதா? இந்த பாதுகாப்பு என்பது, குறிப்பிட்ட வழிமுறையைக் கொண்டுள்ளதா? நாம் காதலிக்கப்படுவதில்லை. காரணம், நமக்கு எப்படி காதலிப்பது என்று தெரியாது. காதல் என்பது என்ன? இதைப்போல உலகம் முழுவதும் களங்கப்படுத்தப்பட்ட தவறாக பொருள் கொள்ளப்பட்ட வார்த்தை வேறு ஏதும் இருக்க முடியாது. நீடித்த காதல், அழியாத காதல் என்பதை மாத இதழ், நாளிதழ், மிஷனரிகள் வரையில் பேசியுள்ளனர். ‘’நான் எனது நாட்டை, அரசரை, நூலை, மலையை, மனைவியை, மகிழ்ச்சியை, கடவுளைக் காதலிக்கிறேன்.’’ இப்படி பலமுறை பலரும் சொல்ல கேட்டிருப்போம். உண்மையில் காதல் என்பது ஒரு சிந

பயம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலில் இருந்து… தமிழாக்கம் வெற்றியும் பயமும் பள்ளி, கல்லூரியை நிறைவு செய்பவர்கள் அதுவரை படித்துக்கொண்டிருந்த நூல்களை தூக்கிப் போட்டுவிடுவார்கள். இனிமேல் எதையும் படிக்கவேண்டாம் அல்லது கற்க வேண்டாம் என மனதில் நினைக்கிறார்கள். மீதியுள்ளவர்கள் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய புத்தகங்களைப் படித்து அறிவுக்கே அடிமையாகிறார்கள். எவ்வளவு நாட்கள் ஒருவர் அறிவைத் தேடுகிறாரோ அந்தளவு அவர் வெற்றியை நோக்கி செல்கிறார். போட்டியிடும் மனப்பான்மை உருவாக, வேகமாக   முன்னே செல்கிறார். இதனால் மக்களுக்கு இடையில் உணவைப் பெறுவதற்கான கடும் போராட்டம் தொடங்குகிறது. வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு என நினைக்கும் வரை நம் மனதிலுள்ள பயத்தை நம்மால் அழிக்க முடியாது. வெற்றி பெறுவதற்கான வேட்கை ஏற்படுவதே தோல்வி பயத்தால்தான். எனவே, இளைஞர்கள் வெற்றி பெறுவதைக் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. வெற்றி பெறும் நோக்கம் என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அது டென்னிஸ் விளையாடும் மைதானம் தொடங்கி தொழில்துறை, அரசியல் என மாறிக்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் வரிசையில் முதலிடத்தை பி