மக்கள் அதிகார அமைப்புகளில், அதிகார பரவலாக்கம்!
ஒரு அமைப்பை குறிப்பிட்ட கட்டமைப்பில் உருவாக்கினால், அதை எதிர்பார்த்தபடி பயன்படுத்திக்கொள்ளலாம். சரிதான். ஆனால், மக்கள் அதிகார அமைப்புகளைப் பொறுத்தவரை, அவை குறிப்பிட்ட முறையில் கட்டமைக்கப்படுவதில்லை. அங்கு நடக்கும் தகவல்தொடர்புகளும் கூட தனித்துவம் கொண்டவை. ஆட்களை ஒருங்கிணைப்பது, உரையாடுவது, குறிப்பிட்ட பணிகளை செய்வது அனைத்துமே பிற தன்னார்வ, தனியார் நிறுவனங்கள், அமைப்புகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக, மக்கள் அதிகார அமைப்புகளில் கண்காணிப்பு என்பது இருக்காது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கும் சென்றாலும் உங்களை யாரோ ஒருவர் கண்காணிப்பார். ஆசிரியர், பேராசிரியர் அல்லது கல்லூரி முதல்வர், நிறுவன முதலாளி, கண்காணிப்பு கேமரா பிரிவு என ஏதாவது ஒரு நச்சு இருக்கும். இப்படியான கண்காணிப்பு ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதாகும். இதை மக்கள் அதிகாரத்துவ அமைப்புகள் செய்வதில்லை. புக்சின், பாகுனின், ஃப்ரீமன் என பல முன்னோடி தத்துவவியலாளர்கள் இதைப்பற்றி கூறியிருந்தாலும் கூட நடைமுறையில், கண்காணிப்பை செய்வது கடினமான ஒன்று. இதுபோன்ற அமைப்புகளில் உருவாகும் உறவுகள் நீர்போன்ற இலகுவான தன்மை கொண்டவை. ...