இடுகைகள்

பொப்பிலி சிம்ஹம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொப்பிலி சிங்கம் டாடியாகும் உணர்ச்சிகரமான கதை! - பொப்பிலி சிம்ஹம் - பாலைய்யா, மீனா, ரோஜா

படம்
  பொப்பிலி சிம்ஹம், 1994 பாலைய்யா, மீனா, ரோஜா Director:  A. Kodandarami Reddy Story by:  V. Vijayendra Prasad Language:  Telugu சரத்பாபு, ஆற்றில் நடைபெறும் விபத்தில் சிறுவன் ஒருவனைக் காப்பாற்றுகிறார். அவன் அவருக்கு மாப்பிள்ளையாகும் முறை கொண்டவன. அவனை ஊர் தலைவராக்க முயல்கிறார். இதில் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி எதிர்கொண்டார், இதை எதிர்க்கும்  மனிதர் அதே ஊரில் இருக்கிறார்.  பொப்பிலி என்ற ஊரின் தலைவர்தான் விஜய ராகவ பூபதி. அதாவது பாலைய்யா. பதவியில் அமர்வதற்கான நாளன்று ஊர் பெரிய மனிதரின் அதாவது முதன்மை வில்லனின் மகனை அடித்து துவைத்துதான்  நாற்காலியில் அமர்கிறார். ஊரில் நடக்கும் அத்தனை பிரச்னைகளையும் வழக்குகளையும் அவர்தான் தீர்த்து வைக்கிறார். ஊருக்கே பெரிய மனிதர், கறைபடாத நேர்மையான மனம்தான் அங்கு இருக்கவேண்டும்.  தாய்மாமன் சரத் பாபுவின் ஆதரவில்தான் விஜய் நாற்காலியில் அமர்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் அவரை எதிர்த்து நின்று ஊர் முன்னே செருப்பால் அடிக்கும் தண்டனையைக் கொடுக்க நேரிடுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிரச்னையாகிறது. இந்த விவகாரத்திற்கு முன்னரே தாய்மகன் மகள் லலிதா, முறை மாமனைத்தான்