இடுகைகள்

கீவ் நகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உக்ரைனில் டெக் ஸ்டார்ட்அப்பில் சாதிக்கும் தொழிலதிபர்கள்!

படம்
  விக்டோரியா ரெபா, பெட்டர்மீ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம்,   உக்ரைன் நாட்டில் டெக் துறை சற்று முன்னேற்றம் கண்டது. 2015-2021 காலகட்டத்தில் , டெக் துறையின் வருமானம் மூன்று மடங்காக உயர்ந்தது. வருமானம் 7 பில்லியன்களாக இருந்தது. இதற்கு அந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களும், அங்கு படித்த அறிவியல் மாணவர்களும் அளித்த பங்களிப்புதான் முக்கியமான காரணம். உக்ரைன் நாட்டில் பல்வேறு டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆராய்ச்சி மையங்களும் தொடங்கி இயங்கி வந்தன. இதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் உள்ளடங்கும். ரஷ்யாவின் போர் தொடங்கியதில் பாதிக்கப்பட்டது மக்களும், ராணுவமும் மட்டுமல்ல. அங்கு பெரிய கனவுகளோடு தொழிலைத் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனர்களும்தான். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். நிறைய தொழில்கள் முடங்கின. ரஷ்யா, உக்ரைனின் அடிப்படை கட்டமைப்புகளை முதலில் தகர்க்கும் வேலையைத் தொடங்கியது.   இதன்படி, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு தொழில் தொடங்கிய உள்நாட்டு குடிமக்கள் தங்கள் தொழிலுக்கான முதலீடு, வாடிக்கையாளர்கள் என பலவற்றையும் மெல்ல இ