உக்ரைனில் டெக் ஸ்டார்ட்அப்பில் சாதிக்கும் தொழிலதிபர்கள்!
விக்டோரியா ரெபா, பெட்டர்மீ |
2022ஆம் ஆண்டு
மார்ச் மாதம், உக்ரைன் நாட்டில் டெக் துறை
சற்று முன்னேற்றம் கண்டது. 2015-2021 காலகட்டத்தில் , டெக் துறையின் வருமானம் மூன்று
மடங்காக உயர்ந்தது. வருமானம் 7 பில்லியன்களாக இருந்தது. இதற்கு அந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களும்,
அங்கு படித்த அறிவியல் மாணவர்களும் அளித்த பங்களிப்புதான் முக்கியமான காரணம். உக்ரைன்
நாட்டில் பல்வேறு டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. ஆராய்ச்சி மையங்களும்
தொடங்கி இயங்கி வந்தன. இதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் உள்ளடங்கும்.
ரஷ்யாவின்
போர் தொடங்கியதில் பாதிக்கப்பட்டது மக்களும், ராணுவமும் மட்டுமல்ல. அங்கு பெரிய கனவுகளோடு
தொழிலைத் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனர்களும்தான். பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
மாற்றப்பட்டனர். நிறைய தொழில்கள் முடங்கின. ரஷ்யா, உக்ரைனின் அடிப்படை கட்டமைப்புகளை
முதலில் தகர்க்கும் வேலையைத் தொடங்கியது. இதன்படி,
மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகியவற்றை தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு தொழில் தொடங்கிய
உள்நாட்டு குடிமக்கள் தங்கள் தொழிலுக்கான முதலீடு, வாடிக்கையாளர்கள் என பலவற்றையும்
மெல்ல இழந்து வருகின்றனர்.
மோசமான போர்
சூழல் இருந்தாலும் கூட உக்ரைனின் தொழில்துறையில் ஐடி சேவைப்பிரிவு ஏழு சதவீத வளர்ச்சி
கண்டுள்ளது. இத்தனைக்கும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சுணங்கியுள்ளது. அப்படியும்
கூட நாட்டிலுள்ள ஸ்டார்ட்அப்கள் விடாப்பிடியாக வேறு நாடுகளுக்கு சென்றும் தொழிலை நடத்தி
வருகிறார்கள். அவர்களில் சிலரது நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.
பெட்டர் மீ
betterme
விக்டோரியா
ரெபா
போருக்கு
முன்னதாகத்தான் விக்டோரியா தனது தொழிலுக்காக மூன்று லட்சம் டாலர்கள் விலையில் ஜெனரேட்டர்கள்,
நீர் சிகிசை உபகரணங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருந்தார். இவரது கீவ் நகர பெட்டர்மீ அலுவலகத்தில்
இருநூறு பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இப்போது நிறுவனம் போர் காரணமாக போலந்தின் வார்சாவிற்கு இடம்பெயர்ந்து இயங்கி வருகிறது.
2016ஆம் ஆண்டு
பெட்டர்மீ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை விக்டோரியா தொடங்கினார். வீட்டில் உடற்பயிற்சி
செய்வது எப்படி என கற்றுத்தரும் ஆரோக்கியம் சார்ந்த நிறுவனம் இது. இதன் ஆப் வழியாக
சேவைகளை உலகம் முழுவதும் பெறலாம். 150 மில்லியன்
முறை ஆப் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
போருக்கு முன்னதாக நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு
முதலீடு பெற விக்டோரியாவுக்கு எண்ணம் இருந்தது. ஆனால் பிறகு அந்த வாய்ப்பு கைவிட்டு
போய்விட்டது. ‘’உண்மையில் வினோதம்தான். இப்போதுள்ள
நிலைமையைப் பற்றி யாரிடமும் புகார் கூறமுடியாது. இங்கு நடைபெற்ற விஷயங்களை வணிகப்பள்ளியில்
கூட நான் கற்கவில்லை’’ என சொல்லி சிரிக்கிறார்.
2022ஆம ஆண்டில்
பெட்டர்மீ நிறுவனம் இருபது சதவீத வருமானத்தைப் பெற்றுள்ளது. எளிதாகவெல்லாம் சூழல் இல்லை.
அத்தனையிலும் போராடி புதிய பொருட்களை உருவாக்கி வணிகத்தில் வென்றிருக்கிறார் விக்டோரியா.
விளையாட்டு வீரர்களுக்கான உடைகள், கையில் அணியும் டிஜிட்டல் பேண்டுகள் பெட்டர்மீயின்
விற்பனையை உயர்த்தியிருக்கிறது.
உக்ரைனை பத்து
இருபது ஆண்டுகளில் அமெரிக்காவின் சிலிக்கன் வேலி
பகுதியைப் போல பார்க்கும் ஆசை விக்டோரியாவுக்கு இருக்கிறது. தாய்நாட்டில் உருவாக்கிய
நிறுவனத்தை அங்கு நடத்த முடியாத துக்கம் அவரது கண்களில் தேங்கி நிற்கிறது. பணத்தை விட
தனது நாட்டில் இயங்குவதையே விக்டோரியா பெரிதாக எண்ணியிருக்கிறார்.
ஹவ்லி
howly
ஸ்லாவா மட்ஸ்கோவ்
ஹவ்லி தொடங்கி
இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த நிறுவனம் கீவ் நகரில் ஜிம் செயல்பட்டு வந்த இடத்தில்
இயங்கி வந்தது. போர் காரணமாக இரண்டு முறை இடத்தை கைவிட்டு போக நேர்ந்திருக்கிறது.
ஸ்மார்ட்
டிவியை எப்படி இயக்குவது? இமெயில் கணக்கின் பாஸ்வேர்ட் மறந்துவிட்டதா, ஒரு எலக்ட்ரானிக்
பொருளை எப்படி பயன்படுத்துவதுஎன தெரியவில்லையா, இணையத்தில் குறிப்பிட்ட சேவைக்கான கணக்கை
முறையாக தொடங்குவது எப்படி, எந்த உணவகத்திற்கு சென்றால் நல்ல உணவு கிடைக்கும். சுற்றுலாவிற்கு
எந்த நாட்டிற்கு செல்லலாம் என கேள்விகளுக்கு
பதில் கூறும் சேவைகளை ஹவ்லி செய்கிறது. ஏறத்தாழ கால் சென்டர் அமைப்பு முறையினா சேவை.
ஏவுகணையின்
சில்லுகளால் தாக்கப்பட்டு மருத்துவசிகிச்சை பெற்றவர், போர் தாக்குதலில் வீட்டை இழந்தவர்
என விசித்திரமான காரணங்களைக் கொண்ட பணியாளர்கள் ஹவ்லியில் உண்டு. ஆனால்,, இவர்கள் யாரும்
தங்களது வேலையை புறக்கணிக்கவில்லை.
ஸ்டார்லிங்க்
செயற்கைக்கோள் மூலம் வேலையை எப்படியோ செய்து வந்தாலும் ஒருநாளுக்கு மின்சாரத்தடை பத்துமுறை
ஆகிறது. இதைத்தான் பொறுத்துக்கொண்டு பணியாற்ற கஷ்டப்படுகிறார்கள். ஹவ்லியில் மொத்தம்
41 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். மின்தடை மட்டுமல்லாது, மின்சாரம் இருக்கும் நேரமும்
குறைவுதான். மின்சாரம் இல்லாதபோது ஜெனரேட்டர்களை
இயக்கி பணிபுரிகிறார்கள்.
போர் நேரத்திலும்
நிறுவனத்தில் ஸ்பானிஷ் மொழி சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வழக்குரைஞர்களை
அமர்த்தி மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் பல்வேறு
டெக் நிறுவனங்கள் தங்களிடமுள்ள உபகரணங்களை பகிர்ந்துகொண்டு பணியாற்றி வருகிறார்கள்.
போர்க்களத்திலும் சிறப்பாக இயங்கும்படி ஹவ்லியை கொண்டு செல்வது உண்மையில் சவாலானது.
அதையும் மட்ஸ்கோவ் சாதித்து வருகிறார்.
ஆண்ட்ரிதாகோவ்ஸ்கி
Djooky
சோவியல் யூனியன்
காலத்தில் ஆண்ட்ரி, குவாண்டம் இயற்பியல் படித்துக்கொண்டிருந்த பிஹெச்டி மாணவர். ஆனால்
அப்போதே அவருக்கு மேற்கத்திய இசை கேட்கும் ஆர்வம் இருந்தது. கேஜிபி எனும் புலனாய்வு
அமைப்புக்கு தெரியாமல் பாடல்களைக் கேட்டு வந்தார். அவர்களிடம் மாட்டியிருந்தால் ஆண்ட்ரியின்
பாடல்கள், சிறையில் மட்டுமே ஒலித்திருக்கும். பிறகு சோவியத் யூனியன் வீழ்ந்தபிறகு மேற்கத்திய
பாடல்களை அவரால் சுதந்திரமாக கேட்க முடிந்தது.
உண்மையில்
இசையை அவரது தொழிலாக மாற்றத் தூண்டியதும் அதன் விளைவாகவே இருக்கும் என நம்பலாம். கீவ்
நகரில் யுனிவர்சல் மியூசிக்கின் முதல் அலுவலகத்தை திறந்தது ஆண்ட்ரிதான். ராக் இசை ரசிகரான
ஆண்ட்ரி, எல்டன் ஜானை உக்ரைனுக்கு அழைத்து வந்து டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தார்.
பின்னாளில், ராக் ஓபரா நிகழ்ச்சியை தயாரித்து டிவி சேனலில் ஒளிபரப்பினார். தனது நண்பரின்
கிளப்பில் முதலீடு செய்து அதை கையில் எடுத்து நடத்தியதும் அவரது வாழ்க்கையில் நடந்தது.
நைட்கிளப் இப்போது கொரோனா, போர் காரணமாக மூடப்பட்டுவிட்டது.
டிஜூக்கி
என்ற வலைத்தளத்தை 2020ஆம் ஆண்டு ஆண்ட்ரி தொடங்கினார். இதில் பட்டியலிடப்படும் இசைக்கலைஞர்களின்
பங்குகளை ஒருவர் வாங்க முடியும். அக்கலைஞர் பெறும் வருமானத்தில் பங்குகளை வாங்கியவருக்கும்
லாபம் உண்டு. 140 நாடுகளில் இருந்து 2 லட்சம் பேர் வலைத்தளத்தில் பதிவுசெய்த பயனர்களாக
உள்ளனர். பதினைந்து முறை ஏலம் நடைபெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டு யூரோவிஷன் பாடல் போட்டி
கைவிடப்பட்டபிறகு, டிஜூக்கி இசை விருது போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு
பிடித்த பாடலை வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம்.
ஏறத்தாழ
534 நாட்களாக போர் நடைபெற்று வருகிற சூழ்நிலையில், ஆண்ட்ரி, தனது தொழிலை போராட்டத்துடன்
நடத்தி வருகிறார். போலந்தின் வார்சாவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு பதினான்கு
மணி நேரம் செலவழித்து சென்று வந்திருக்கிறார்.
இந்த மாநாட்டை கூகுள் ஒருங்கிணைப்பு செய்தது. ஆண்ட்ரி, இப்போது கிளெர் என்ற
இசைக்கலைஞரோடு சேர்ந்த பாடல் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவர்கள் வேலை செய்யும்
இடத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் ரஷ்யாவின் டாங்குகள் நிற்கின்றன.
பீட்டர் கெஸ்ட்
வயர்ட் இதழ்
ஆகஸ்ட்
2023
கருத்துகள்
கருத்துரையிடுக