தெரிஞ்சுக்கோ - கரடிகள்

 








தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்

 கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம்.

கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது.

துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு.

தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு.

ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது.

உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன.

ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது.

சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந்து தேனை உறிஞ்சித் தின்னவே.

கருப்பு கரடி, குறைந்த தூரம் என்றால் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் ஓடும். இதனிடமிருந்து ஓடித்தப்பி உயிர் பிழைப்பது கடினம். அப்படி உயிர் தப்பினாலும் உடலில் ஏற்படும் காயங்கள் கடுமையாக இருக்கும். அதற்குப் பிறகு ஒருவரின் வாழ்க்கை இயல்பானதாக இருக்காது.

ஆயிரம் மீட்டர் தொலைவிலேயே துருவக்கரடிகள் சீல்களை அடையாளம் அறிந்துகொள்கின்றன. அவை ஒரு மீட்டர் ஆழத்திலுள்ள பனிப்பாறைகளுக்குள் ஒளிந்தாலும் கூட தப்ப முடியாது.

கருப்பு கரடிகள் கோடைக்காலத்தில் ஒரு வாரத்திற்கு 13.6 கி.கி எடையைக் கூட்டுகின்றன.

-அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

image

pinterest

கருத்துகள்