இயற்கையோடு கொள்ளும் தொடர்பை இழக்கக்கூடாது - ஜே கிருஷ்ணமூர்த்தி

 








ஜே கிருஷ்ணமூர்த்தி கூறிய கருத்துகள்

பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு இடையில் எதற்கு இத்தனை முரண்பாடுகள், பிரச்னைகள் உருவாகின்றன? இதற்கு எளிதான காரணங்களாக அதிக மக்கள்தொகை, அறநெறி வீழ்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து மக்களின் நேரடி தகவல் தொடர்பு குறைந்துபோனது  என்று குறிப்பிடலாம்.

உண்மையில் இப்படி முரண்பாடுகள் ஏற்பட அடிப்படைக் காரணங்கள் என்ன? பாரம்பரியமாக நன்மைகள், கருணை, உயிர்களைக் கொல்லாமை, இரக்கமின்றி  நடந்துக்கொள்ளாமை ஆகியவற்றை போதித்த நாடு எங்கே தவறாகிப்போனது. அதன் செயல்பாட்டில் எங்கே தவறு நடந்தது?

பாம்பே – ஜனவரி 1968 மீட்டிங் லைஃப் 

தொன்மைக் காலத்தில் பேராசை, அதிகாரம் ஆகியவற்றில் சிக்காமல் சுதந்திரமாக மக்கள் குழுவினர் வாழ்ந்தனர். பேராசை, அவநம்பிக்கை ஆகியவற்றில் அகப்படாமல் வாழ்ந்த மக்கள் குழுவினரால், ஆன்மிகம், அறம் ஆகியவை வீழ்ச்சியடையாமல் பிழைத்தன.

  இந்த மக்கள் குழு, பெரிதாகும்போது சமூகத்திற்கும் அதேயளவில் பாதுகாப்பு கிடைத்தது. இப்படி பாதுகாப்பு கிடைத்து தப்பித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகில் ஏற்படும் பெரும் அழிவுகளில் இருந்து மிகச்சில மனிதர்கள் மட்டுமே தப்பி பிழைத்து வாழமுடியும். உண்மையில் நீங்கள்தான் மிகப்பெரிய அதீத நெருக்கடியை உருவாக்குபவராக இருக்கிறீர்கள்.

சென்னை அக்டோபர் 1947

தி கலெக்டட் வொர்க்ஸ் வால். 4

 

நோய்களைப் பற்றிய சோகம் மனிதர்களை பற்றியிருக்கிறது. மனிதர்களை முழுக்க தனிமைப்படுத்தும் விதமான சோகமும் உலகில் உண்டு. வறுமையான, கைவிடப்பட்ட, அழுக்கான, நம்பிக்கையற்ற மக்களைப் பார்க்கும்போது வறுமை ஏற்படுத்தும் சோகத்தை நீங்கள் காணலாம். உலகிலுள்ள அனைத்து விலங்குகளும் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்டு, ஆய்வகங்களில் துண்டாக்கப்படும்போதும், ஒருவித சோகம் உருவாகிறது.

பாம்பே

28 ஜனவரி 1978

 

நாம் இயற்கையோடு குறைந்தளவே தொடர்புகொண்டிருக்கிறோம். அதுவும் விசித்திரமானது. பூமியில் வாழும் உயிரினங்களைப் பற்றிய எந்தவித உணர்வும் மனிதர்களுக்கு எழவில்லை. நாம் இயற்கையோடு ஆழமான உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தால், பசிக்காக விலங்கை ஒருபோதும் கொல்லமாட்டோம். சுயலாபத்திற்காக நாயை, குரங்கை, பன்றியைக் காயப்படுத்த மாட்டோம்.

நாம் வேறு வழியைக் கண்டறிந்து காயங்களைக் குணப்படுத்திக்கொண்டிருப்போம். உடலை தேற்றிக்கொண்டிருப்போம். ஆனால், மனதைக் குணப்படுத்திக்கொள்வது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒன்று. இயற்கையோடு நீங்கள் ஒன்றிருந்தால் மட்டுமே மனரீதியான குணப்படுத்தல் நிகழும்.  

25 பிப்ரவரி 1983

கிருஷ்ணமூர்த்தி டு ஹிம்செல்ஃப்

நாம் இயற்கையோடு தொடர்பை இழக்கிறோம் என்றால, பிற மனிதர்களுடனும் தொடர்பை இழக்கிறோம் என்று பொருள். கூச்சமும், துடிப்பும் கொண்ட பறவைகளுடன் தொடர்பை இழக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் குழந்தையுடன் உள்ள தொடர்பையும் இழக்கிறீர்கள். நீங்கள் ஒரு விலங்கை உணவுக்காக கொல்கிறீர்கள் என்றால், நாட்டின் எல்லையில் உள்ள ஒரு மனிதனைக் கொல்கிறீர்கள் என்றே பொருள்.

வாழ்க்கையில் நுட்பமான செயல்பாடுகளின் தொடர்புகளை இழக்கிறீர்கள் என்றால், அடிப்படையில் உங்கள் அனைத்து உறவுகளையும் இழக்கிறீர்கள். பிறகு நீங்களும் உங்கள் மனதிலுள்ள தன்முனைப்பு, தேவைகள், கோரிக்கைகள், வேண்டுதல்கள் அனைத்தும்  தனியாக திரளும. நீங்களும், உலகமும் எதிரெதிராக நிற்க முரண்பாடுகள் எல்லையற்றதாக மாறியிருக்கும்

தி வோல் மூவ்மென்ட் ஆப் லைஃப் இஸ் லேர்னிங். – லெட்டர்ஸ் டு தி ஸ்கூல்ஸ்

 

தி ரியல் கிரிசிஸ்  – ஜே கிருஷ்ணமூர்த்தி


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்