இடுகைகள்

பாறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு!

படம்
      அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி முதல் தட்பவெப்பநிலை செயற்கைக்கோளை ஏவிய நாடு? அமெரிக்கா. 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று டிரோஸ் 1 என்ற தட்பவெப்பநிலை செயற்கைக்கோள் ஏவப்பட்டது. கிடைத்த புகைப்படங்கள் அந்தளவு துல்லியமாக இல்லை. ஆனால், மேகங்கள், புயல்களைப் பற்றிய படங்கள் கிடைத்தன. மொத்தம் எழுபத்தேழு நாட்கள் மட்டுமே செயற்கைக்கோள் இயங்கியது. பிறகு, ஏற்பட்ட மின் விபத்தால் செயலிழந்துபோனது. தட்பவெப்பநிலை பற்றிய முதல் செய்தி லண்டனின் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது. ஆண்டு 1850. தட்பவெப்பநிலை பற்றிய ஒளிப்பரப்பு, விஸ்கான்சின் பல்கலைக்கழக நிலையத்தில் இருந்து 1921ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது. பாரோமீட்டரை கண்டுபிடித்தது யார்? கிரேக்க வார்த்தையிலிருந்து பாரோமீட்டர் வார்த்தை வந்தது. இதன் பொருள், எடை. ராபர்ட் பாயல் என்பவர், பாரோமீட்டர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாயல் பாரோமீட்டரின் வடிவத்தை மாற்றி அமைத்தார். ராபர்ட் ஹூக் என்பவர், எளிதாக அதன் டயலை பார்க்கும்படி அதை மேலும் மேம்படுத்தினார். 1644ஆம் ஆண்டு பாரோமீட்டரை இவாங்கெலிஸ்டா டோரிசெல்லி என்பவர் கண்டுபிடித்தார். இவர் கலில...

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - மிஸ்டர் ரோனி

படம்
            பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? இதற்கான பதிலை பலரும் அறிந்திருப்பார்கள். பதில் சொல்வதும் எளிதுதான். ஆனால் அதன் பின்னணிதான் இங்கு முக்கியம். சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளுக்கு 67 நிலவுகள் உள்ளன. இதில் பெரிய நிலவின் பெயர், கனிமெட். 2600 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதுவே பிற கோள்களுக்கும் நிலவு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள தகவல். இதுபற்றிய டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜீரோ தொடங்கி பதினெட்டாயிரம் நிலவுகள் வரை பதில் தரலாம் என கூறப்பட்டது. ஆனால் பொருத்தமான உண்மைக்கு அருகில் உள்ள பதில் ஒன்று. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பாறைக்கோள்கள் வட்டப்பாதைக்கு வருகின்றன. பல்லாண்டுகளாக சுற்றி வருகின்றன. அவற்றை நாம் நிலவு என்று கூறுவதில்லை. இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள்தான். துல்லியமாக சொன்னால் அறிவியலாளர்கள் வகுத்த இரண்டு விதிகள். அவை ஆயிரம் ஆண்டுகளாக வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டும். அதன் அளவு ஐந்து கி.மீ. என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்கவேண்...

ஜெயன்ட் காஸ்வே - அரக்கர்களின் மோதலால் உருவான பாறைவடிவம்

படம்
  தி ஜெயன்ட் காஸ்வே இடம் – வடக்கு அயர்லாந்து கலாசார தொன்மை இடமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 1986 சற்று வெயில் இருக்கும் நாளாக சென்றால் நன்றாக சுற்றிப் பார்க்கலாம். கற்களில் ஈரம் இருந்தால் கால் பிடிமானமின்றி வழுக்கும். இதைப்பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம். ஆனாலும் என்ன ரைமிங்காக, டைமிங்காக இப்போதும் எழுதலாம். கலாசார தொன்மை என்ற கோணத்தில் எழுதப்படும் கட்டுரை இது. அயர்லாந்தில் இருக்கும்போது முடிந்தால் ஜெயன்ட் காஸ்வே சென்று பாருங்கள். சூரிய உதயம் அட்லான்டிக் கடலில் வரும்போது, அருங்கோண கற்களில் சூரிய ஒளி மெல்ல படியும் காட்சி அற்புதமானது. பழுத்த இலை மரத்திலிருந்து காற்றின் வழியே இறங்கி நிலம் தொடுவது போன்ற காட்சி. கடல் அலைகள் வந்து கற்களில் மீது மோதும் ஒலியும் நீங்கள் கேட்க முடிந்தால் கவனம் அங்கு குவிந்தால் அதை நீங்கள் நினைவில் ஏதோ ஓரிடத்தில் பின்னாளிலும் வைத்திருக்கலாம்.   இரு அரக்கர்களுக்கு நடைபெற்ற போர் காரணமாக காஸ்வே உருவானதாக கூறுகிறார்கள். இதை உருவாக்கியவர் ஃபின் மெக்கூல். அயர்லாந்தை கடந்து செல்ல கற்பாலத்தை உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பிறகு தன்னை எத...

புவியியல் சொற்கள்! - சிலிகா பாறை, கடல் படுகை, இயக்கநிலை எரிமலை, அமில கழிவுநீர்

படம்
  Acidic Rock அதிகளவு சிலிகா கொண்டுள்ள பாறை. எடு. கிரானைட் (Granite), ரியோலைட் (Rhyolite) Accumulation Zone பனிமலையின் மேற்பகுதி. அதிகளவு பனி குவியும் இடம் என்று கூறலாம். இதன் கீழ்ப்பகுதிக்கு அபிளேஷன் ஜோன் (Ablation zone)என்று பெயர்.  Accretionary Wedge கடல் படுகை, கண்டத்தட்டு ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வண்டல் மண் பகுதி.  Active Volcano தற்போது இயக்கநிலையில் உள்ள எரிமலையைக் குறிக்கிறது Acid Mine Drainage (AMD) சுரங்கப்பணிகளின்போது அதிலிருந்து வெளிவரும் அமில கழிவுநீர். சுரங்கப்பணியின் போது, சல்பைடு கனிமங்கள் ஆக்சிஜனோடு வினைபுரிந்து அமில கழிவு நீர் உருவாகிறது. 

சீனாவில் சுண்ணாம்புக்கல் பாறைகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்! - மார்ஜோரி ஸ்வீட்டிங்

படம்
மார்ஜோரி ஸ்வீட்டிங் ( Marjorie Mary Sweeting ) 1920-1994 இங்கிலாந்தின் லண்டன் நகரில் பிறந்தவர்.  மார்ஜோரியின் தந்தை லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி புவியியல் ஆசிரியர்.  மார்ஜோரி, கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் புவியியலைக் கற்றார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியதால் படிப்பைக் கைவிட்டு, நார்த் வேல்ஸில் உள்ள டென்பிக் என்ற இடத்திற்கு சென்றார்.  இருந்த அங்கிருந்த ஹோவெல்ஸ் பள்ளிக்கு புவியியல்  ஆசிரியராக பணியாற்றினார்.   1943ஆம் ஆண்டு, தனது வேவ் ட்ரோ எக்ஸ்பரிமென்ட்ஸ் ஆன் பீச் புரோஃபைல்ஸ் என்ற ஆய்வுக்கட்டுரையை தி ஜியோகிராபிகல் ஜர்னல் இதழில் வெளியிட்டார். 1948-1951ஆம் ஆண்டு வரை முனைவர் ஆய்வில் ஈடுபட்டவர், ஆக்ஸ்ஃபோர்டில் உதவித்தொகை பெற்றார். கூடவே, செயின்ட் ஹியூ கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.   1977ஆம் ஆண்டு, சீனாவிற்கு குகைகளை ஆராயச் சென்றார். அங்கு, 5 லட்சம் சதுர கி.மீ. பரப்பில் அமைந்திருந்த சுண்ணாம்புக்கல் பாறைகளை ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதிய ஒரே வெளிநாட்டு புவியியலாளர் மார்ஜோரி தான். இவர், பல்வேறு நாடுகளில் உருவாகியுள்ள பாறை வடிவங்க...

புவியியல் - கனிமங்களை அறிவோம்

படம்
  இரும்பு (Iron) பூமியின் அடிப்பரப்பில் இரும்புத்தாது 5 சதவீதம் உள்ளது. இரும்புத்தாது தனியாக கிடைப்பது அரிது. பெரும்பாலும் நிக்கலுடன் சேர்ந்துதான் கிடைக்கிறது. 7.5 சதவீதம் நிக்கல் கலந்த இரும்பின் பெயர், காமாசைட் (Kamacite). 50 சதவீத நிக்கல் கலந்துள்ள இரும்பிற்கு, டேனைட் (Taenite) என்று பெயர். இந்த வகைக்குள் வராமல் உள்ள இரும்பு நிக்கல் கலவைக்கு டெட்ராடேனைட் (Tetrataenite) என்று பெயர். இந்த வகை தாதுவை விண்கற்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  மேற்கூறிய தாது வகைகள் துகள்களாக அல்லது வட்ட வடிவில் கிடைக்கின்றன. நிலவு மற்றும் சூரியனில் இரும்புத்தாது இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  பிஸ்மத் (Bismuth) பிஸ்மத், மத்திய காலத்திலிருந்தே மக்களின் பயன்பாட்டில் உள்ளது. 1450ஆம் ஆண்டு ஜெர்மானிய துறவி பாசில் வேலன்டைன் (Basil Valentine), பிஸ்மத் உலோகத்தை முதன்முதலில் குறிப்பிட்டார். பளபளப்பான, வளையக்கூடிய தன்மை கொண்டது.பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. தகரம், காரீயம், செம்பு ஆகியவற்றுடன் சேர்ந்து தாதுவாக கிடைக்கிறது.  இதனை பிற உலோகங்களோடு இணைத்து உ...

பாறைகள் மண்துகள்களாக மாறும் செயல்பாடு! - ஆர்கானிக் வெதரிங்

படம்
  பாறைகளில் ஏற்படும் மாற்றம்! நடக்கும்போது, விளையாடும்போது காலில் ஒட்டியுள்ள மண்ணைப் பார்த்திருப்பீர்கள். இந்த மண் எப்படி உருவாகிறது என அறிவீர்களா? பாறைகள் மெல்ல உடைந்து துண்டுகளாகி, சிறு துகள்களாகி மண்ணாகிறது. இயற்கையாக நடைபெறும் இச்செயல்பாட்டிற்கு, வெதரிங் (weathering) என்று பெயர்.  பாறைகள் உடைந்து சிறு துண்டுகளாகி மண் துகள்களாக மாறுவதற்கு மரம், விலங்குகள், நுண்ணுயிரிகள், மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக உள்ளன. இதனை  சூழலியல் வல்லுநர்கள், பயாலஜிகல் வெதரிங் (Biological weathering)என்று குறிப்பிடுகின்றனர். ஷ்ரூஸ் (Shrews), மோல்ஸ் (Moles), மண்புழுக்கள், எறும்புகள்  ஆகியவை பாறையில் துளைகளையும், விரிசல்களையும் ஏற்படுத்துகின்றன. இவற்றில், பறவைகள் தம் எச்சம் மூலமாக  விதைகளை விதைக்கின்றன. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகும்போது பாறை மெல்ல உடைபடுகிறது.  சயனோபாக்டீரியா (Cyanobacteria),  பாறையில் வளரும் செடிவகை (Lichens), பாசி, பூஞ்சை ஆகியவையும் பாறைகளைத் துளையிடுகின்றன. இதற்கு, வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக பாறையிலிருந்து, தனக்குத் தேவையான ...

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்ட...