இடுகைகள்

சீரியல் கொலைகாரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோயாளிகளுக்கு தசை தளர்வு மருந்து கொடுத்து கொன்ற கொலையாளி - நெசட்

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் ஆர்ன்ஃபின் நெசட் நார்வே  சீரியல் கொலைகாரர்கள் குறிப்பிட்ட துறை சார்ந்து இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நெசட் மருத்துவத்துறை சார்ந்த கொலைகாரர். 1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பிறந்தவர். ஓர் மருத்துவமனையில் செவிலியராக இருந்தார். அப்பணியில் அங்கிருந்த 22க்கும் மேற்பட்ட நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றார். எத்தனை பேரை கொன்றீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு, எனக்கு சரியாக நினைவில்லை என்று தில்லாக பேசினார். அதே தில்லுடன்தான் அனைத்து கொலைகளை சிம்பிளாக செய்தார். ஆர்க்டலிலுள்ள ஜெரியாரிக் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனத்தில் நெசட் இயக்குநராக இருந்தார். அங்குதான் கியூராசிட் எனும் தசை தளர்வு மருந்தைப் பயன்படுத்தி பலரையும் வைகுந்தம் அனுப்பி மகிழ்ந்தார். 22 பேர்களை கொன்றதற்காக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் ஐந்து மாதங்கள் விசாரணை நடந்தது. நார்வே நாட்டு சட்டப்படி உச்ச தண்டனையாக 21 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. விடுதலையானவர் 2004ஆம் ஆண்டு முதல் தன் பெயரை மாற்றிக்கொண்டு நார்வேயில் வேறிடத்தில் வசித்து வருவதாக க

என்னை அறிந்தால், மகனையும் கொல்வேன் - கேரி ரிட்ஜ்வே 2

படம்
அசுரகுலம் கேரி ரிட்ஜ்வே ஆற்றில் விடப்பட்ட சடலங்களை ஆராய்ந்து, அதைச் செய்வதற்கான வாய்ப்புள்ள குற்றவாளிகளின் பட்டியலை காவல்துறையின் டாஸ்க் ஃபோர்ஸ் தயாரித்தது. இதில் சீரியல் கொலைகாரர் டெட் பண்டியிடம் செய்த விசாரணையில் கிடைத்த தகவல்படி, கொலைகாரர் தனக்கு செல்வாக்கான தெரிந்தவர்களின் வட்டத்தில் கொலை செய்வார் என்ற ட்ரிக் ஏனோ கேரி விஷயத்தில் வேலைக்கு ஆகவில்லை. 1980ஆம் ஆண்டு போலீஸ் கேரியைப் பிடித்தது. கேஸ் என்ன தெரியுமா? செக்ஸ் செய்யும்போது, விலைமாதின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார் கேரி என்பதுதான். ஆனால் கேரி அலட்டிக்கொள்ளவே இல்லை. பாலுறவின்போது, திடீரென அவள் என்னை தாக்க முயன்றால், தற்காப்பிற்காக கழுத்தைப் பிடித்தேன் என்றார். நடந்த சம்பவத்தை திருட்டு, கொலை போல செய்து காட்ட முடியுமா? கற்பனை செய்து பார்த்த போலீஸ் அதிலுள்ள லாஜிக்கை டிக் அடித்துவிட்டு கிளம்பு என சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு சீ டாக் எனும் அப்பகுதியில் நிறைய பெண்களை சடலமாக எடுத்தும் கேரி மீது அணுவளவும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. 1983ஆம் ஆண்டு கேரியின் டிரக், ஆபாசமாக ஆடியது. அங்கு ரோந்து வந்த போலீஸ் அதனைத்

கொலைகார தேசம் - அமெரிக்கா

படம்
ஜெஃப்ரி டாமர் அசுரகுலம் கொலை விழும் நாடு! அமெரிக்காவில் இன்றுவரை இரண்டு லட்சத்து இருபதாயிரம் கொலை வழக்குகளை என்ன செய்வது எப்படி முடிப்பது என தெரியாமல் போலீஸ் திணறி வருகிறது. இக்கணக்கு தொடங்குவது 1980ஆம் ஆண்டிலிருந்து. போலீஸ்தான் சீரியல் கொலைகார ர்களை பிடித்து மின்சார நாற்காலி, அல்லது விஷ ஊசி போட்டுக்கொல்கிறது. ஆனாலும கொலைகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை. 1900 இல் அமெரிக்க காவல்துறை சீரியல் கொலைகார ர்களை வகைப்படுத்தி வைத்திருந்த து. இம்முறையில் 3 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கியாகவே இருந்தது என்கிறார். மருத்துவர் மைக்கேல் ஆமோட். இக்கொலைகார ர்களின் 52 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 40 சதவீதத்தினர் கருப்பர்கள். பிற இனத்தவர்கள் மீதி. 1970 முதல் 2005 வரை 93 மூன்று பேர்களை கொலை செய்த சாமுவேல் லிட்டியல் என்ற கொலைகாரப் பெண் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளார். என்ன காரணம்? தனிமைதான். சீரியல் கொலைகார ர்களில் இளம் வயது பெரும்பாலும் தாயிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவே இருக்கிறது. இது அவர்களின் மூளை வளர்ச்சியில் பெரும் மாறுதல்கள

சீரியல் கொலைகாரர்களின் குணம்

சீரியல் கொலைகாரர்களின் குணங்கள் உடனே இது அனைவருக்கும் பொருந்தாது என கூவாதீர்கள். பொதுவாக ஆராய்ச்சி, மற்றும் விசாரணை அடிப்படையில் இதனைக் கூறுகிறோம். சக்திசாலி நான் பொதுவாக தான் செய்த மூர்க்கமான கொலைகள், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சீரியல் கொலைகாரர்களை அடித்துக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். அது ஒரு சந்தோஷம். தான் ஆற்றல் மிக்கவான இருக்கிறேன் என்பதை நீங்கள் கேள்வி கேட்பது உணர வைக்கிறது. எனவே அவர்கள் அதனை தீவிரமாக விரும்புகிறார்கள். சூழ்ச்சிவாதிகள் வரலாற்றில் இது நடப்பதுண்டு. ராட்சசன் படத்தில் சில க்ளூக்களை வேண்டுமென்றே விட்டுச்செல்வது, மெல்ல கொலையின் தீவிர குளிரை எதிரிகளின் மனதில் செலுத்துவது, தவறான தகவல்களை கசியவிட்டு அலைய வைப்பது என்பதை சீரியல் கொலைகாரர்கள் செய்வார்கள். செய்தார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? அது அவர்களை முக்கியமானவர்களாக மாற்றுகிறது. அந்த விளையாட்டு அவர்களுக்கு பிடித்திருக்கிறது. தற்பெருமை தவறு சீரியல் கொலைகாரர்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாதபடி ஸ்மார்ட்தான். ஆனால் வாய் அத்தனையையும் கெடுக்கும். யெஸ் சனி நாக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்த டிராவர்