இடுகைகள்

அதர்வா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் தந்திர இளைஞர் கூட்டத்தை தேடும் போலீஸ்காரர்! 100 - சாம் ஆண்டன்

படம்
  அதர்வா, ஹன்சிகா - 100 படத்தில் -இயக்கம் சாம் ஆண்டன் இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் அதர்வா 100 இயக்கம் சாம் ஆண்டன் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி, ஆடுகளம் நரேன், யோகிபாபு களத்தில் வேலை செய்ய நினைக்கும் நாயகனை கட்டுப்பாட்டு அறையில் உட்கார வைத்தால் என்னாகும் என்பதுதான் கதை.   காவல்துறையில் வேலை பார்க்க நினைக்கும் நாயகனுக்கு கிடைக்கும் வேலை என்னமோ கட்டுப்பாட்டு அறையில் அழைப்புகளை எடுத்து பேசுவதுதான். அந்த அழைப்புகளை வைத்து அவர் களத்தில் ரகசியமாக இறங்கி பெண்களை விபச்சாரத்தில் இறக்கும் இளைஞர் கூட்டத்தை பிடித்து, குற்றவாளியை கொல்கிறார். படம் தொடக்கம் முதலே ஆட்கள் காணாமல் போய் பிறகு கொலை செய்யப்பட்டு அந்த வழக்கு முடிந்ததாக காவல்நிலையத்தில் முடித்துவைக்கப்படும் காட்சியோடு தொடங்குகிறது. இயக்குநர் சாம் ஆண்டன், படத்தில் பெண்களை கடத்தி அதை காதல் போல நாடகமாடி அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவதை விரிவாக விளக்கியிருக்கிறார். இந்த கதையில் கட்டுப்பாட்டு அறை, அதன் முக்கியத்துவத்தைப் பேசியிருக்கிறார்கள். அதுதானே படத்தின் தலைப்பு. படத்தில் வரும் காதலை வெட்டி எடுத்துவிட்டால் எந்த சேதாரமும் இல்லை.

குழந்தை கடத்தலைத் தடுத்து அப்பாவின் களங்க கறையைத் துடைக்கும் மகன் - ட்ரிகர் - அதர்வா, தான்யா - சாம் ஆண்டன்

படம்
  ட்ரிகர் இயக்கம் சாம் ஆண்டன் நடிப்பு அதர்வா, தான்யா பாலச்சந்திரன், முனீஸ்காந்த், சின்னிஜெயந்த் இசை ஜிப்ரான்   அப்பாவின் கடந்த கால அவமானத்தை துடைக்கப் போராடும் மகனின் கதை. அல்சீமரால் அதர்வாவின் அப்பா அருண்பாண்டியன் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்கு இருக்கும் நினைவு எல்லாம் தான் ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்த தகவல்கள் மட்டுமே. அதை மட்டுமே காகிதத்தில் கிறுக்கி சுவற்றில் மறக்கக் கூடாது என ஒட்டி வைத்திருக்கிறார். அதை அதர்வா பார்த்து அதில் உள்ள மர்மம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்கான வாய்ப்பு இயல்பாகவே அவருக்கு ஆயுதக்கடத்தல் மூலமாக கிடைக்கிறது. அந்த வழக்கை ஆராயும்போது அதர்வாவுக்கு வழக்கின் அடிப்படை விஷயமாக பேரல்லல் கிரைம் என்பது புரிய வருகிறது. இதை வைத்து வழக்கை எப்படி தீர்த்தார் என்பதே படம்.   வேகமாக காட்சிகள் நகரவேண்டிய படம். அதை ஒளிப்பதிவாளரும், சண்டைப்பயிற்சி கலைஞரான திலீப் சுப்பராயனும் புரிந்துகொண்டு பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் சண்டைக்காட்சிகள் என வரும்போது   பார்ப்பவர்கள் வயிற்றில் அட்ரினலின்   சுரக்கிறது. சாம் ஆண்டனின் இயக்கத்தில் ஹ

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசைக்காக பார்க்கவேண்டிய அதர்வாவின் படம்! செம போதை ஆகாத ! 2018

படம்
              செம போத ஆகாத   Director: Badri Venkatesh Produced by: Atharvaa Starring: Atharvaa, Mishti, Anaika Soti Music by Yuvan Shankar Raja Cinematography Gopi Amarnath காதலி மனைவியாகும் சமயத்தில் திடீரென கல்யாணத்தை நிறுத்திவிட அவமானத்தில் சுருங்கும் காதலன் , அதனை மறக்க நண்பனிடம் ஐடியா கேட்கிறான் . அவன் சொல்லும் ஐடியா செக்ஸ்தான் . இதற்காக வரும் பெண்ணை கலாசாரம் காக்கும் அபார்ட்மெண்டுக்குள் கூட்டிச்செல்கிறான் இளைஞன் . ஆனால் அவனால் செக்ஸை கூட நிம்மதியாக செய்யமுடியாதபடி அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகள் வருகிறது . அதனை சமாளித்துவிட்டு வந்து வீட்டுக்கு வரும்போது விலைமாது செத்துக்கிடக்கிறாள் . எப்படி இறந்தாள் என இளைஞன் அவளின் பின்னணியைத் தேடுவதுதான் படம் . தலைப்புக்கும் படத்திற்குமான தொடர்பு ஒன்றே ஒன்றுதான் . பாரில் போதையில் செக்சிற்காக ஒரு பெண்ணை வேண்டும் என்ற அதர்வா சொல்லுவதுதான் . அதுதான் கதையை மெல்ல நகர்த்தி செல்கிறது . படம் பெரும்பாலும் அறைக்குள்ளேயே நடக்கிறது . ஆனால் கதையில் அடுத்தடுத்து பெரிய சுவாரசியம் இல்லை . இதனால் ஒய்எஸ்ஆரின் பின்னணியைக் கேட்டுத்தான்