யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசைக்காக பார்க்கவேண்டிய அதர்வாவின் படம்! செம போதை ஆகாத ! 2018
செம போத ஆகாத
Music by | Yuvan Shankar Raja |
---|---|
Cinematography | Gopi Amarnath |
காதலி மனைவியாகும் சமயத்தில் திடீரென கல்யாணத்தை நிறுத்திவிட அவமானத்தில் சுருங்கும் காதலன், அதனை மறக்க நண்பனிடம் ஐடியா கேட்கிறான். அவன் சொல்லும் ஐடியா செக்ஸ்தான். இதற்காக வரும் பெண்ணை கலாசாரம் காக்கும் அபார்ட்மெண்டுக்குள் கூட்டிச்செல்கிறான் இளைஞன். ஆனால் அவனால் செக்ஸை கூட நிம்மதியாக செய்யமுடியாதபடி அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகள் வருகிறது. அதனை சமாளித்துவிட்டு வந்து வீட்டுக்கு வரும்போது விலைமாது செத்துக்கிடக்கிறாள். எப்படி இறந்தாள் என இளைஞன் அவளின் பின்னணியைத் தேடுவதுதான் படம்.
தலைப்புக்கும் படத்திற்குமான தொடர்பு ஒன்றே ஒன்றுதான். பாரில் போதையில் செக்சிற்காக ஒரு பெண்ணை வேண்டும் என்ற அதர்வா சொல்லுவதுதான். அதுதான் கதையை மெல்ல நகர்த்தி செல்கிறது. படம் பெரும்பாலும் அறைக்குள்ளேயே நடக்கிறது. ஆனால் கதையில் அடுத்தடுத்து பெரிய சுவாரசியம் இல்லை. இதனால் ஒய்எஸ்ஆரின் பின்னணியைக் கேட்டுத்தான் சமாளிக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி பத்ரி ரிலாக்சாக படம் எடுத்திருக்கிறார். இதனால் மற்ற சமாச்சாரங்கள் ஏதும் பதற்றம் ஏற்படுத்துவதில்லை.
இறந்த பெண்ணின் உடலை மறைத்து வைத்திருக்கிறார்கள். அதனை
பிறருக்கு தெரியாமல் காப்பாற்ற வேண்டும். ஆனால் படத்தில் அப்படிப்பட்ட பதற்றமான கா்ட்சிகள் ஏதும் பார்வையாளர்களுக்கு திக்திக் என திகைத்து வைத்து பெருமூச்சு விட வைக்கவில்லை. ஆனால் ஆகட்டுமே என்றுதான் தோன்றுகிறது.
கதைக்கு கொஞ்சம் ப்ரீத்திங் ஸ்பேஸ்ஆக மிஷ்டி சக்ரபர்த்தி பாத்திரம் வருகிறது. அதில் எந்த தெளிவும் இல்லை. பாடல் வேண்டுமே? யுவன் போட்ட பாடல்களை அவரை வைத்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தவிர வேறு எதுவும் இல்லை.
யுவனின் இசைக்காக பார்க்கலாம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக