நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள்- தமிழ், தெலுங்கு, இந்தி- ஓடிடி முதல் சினிமா வரை .....2020
நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள்
காளிதாஸ்
பாவகதைகளில் சுதாவின் பகுதியில் நடித்தவர், இவர் நடித்த முதல் படமாக ஒருபக்க கதையும் இப்போது வெளியாகியுள்ளது. புத்தம் புது காலை என்ற அமேசானின் படத்தில் கூட நடித்திருக்கிறார். சிறுவனாக நடித்தபோது தேசிய விருது பெற்றவர் காளிதாஸ்.
வாணி போஜன்
ஓடிடியில் வரும் பல்வேறு படங்களுக்கு இவரைத்தான் புக் செய்கிறார்கள். இவரும் தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ ஓகே என பதில் சொல்லி நடித்துக் கொடுத்துவிடுகிறார். அப்படித்தான் லாக்கப், டிரிபிள்ஸ் படங்கள் வந்தன. சினிமாவாக ஓ மை கடவுளேவில் கொடுத்த வாய்ப்பில் சிறப்பாகவே நடித்திருந்தார். தெலுங்கில் தருண் பாஸ்கரோடு ஒரு படத்தில் நடித்தார்.
சித்து ஜோனலகட்டா
இப்போது நடித்த இரண்டு ஓடிடி படங்களும் இவரே எழுதி திரைக்கதை எழுதி நடித்தவைதான். கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா, மா விந்த கதா வினுமா ஆகியவற்றில் இளைஞர்களை குறிவைத்து எழுதிய வசனங்கள், காட்சிகள் அனைத்தும் பிரமாத வெற்றி பெற்றன. இவர் நடித்த குண்டூர் டாக்கீஸ் படம் முக்கியமானது. அதில் கொஞ்சம் விவகாரமான கேரக்டரில் நடித்திருப்பார். அடுத்தடுத்த படங்களிலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பாதையில் பயணித்து வருகிறார். அனேகமாக பின் வரும் காலங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட இயக்குநர் சேரில் உட்கார்ந்துவிடும் தைரியமும் துணிச்சலும் சித்துவுக்கு உள்ளது.
பிரதீக் காந்தி
ஸ்கேம் 1993 படத்தில் ஹர்சத் மேத்தாவாக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். பொறியியல் பட்டதாரியான பிரீதிக் ராங் சைடு ராஜூ படத்தில் நடித்து தேசிய விருது வென்றவர். குஜராத்தில் நாடகப் பின்னணியில் இருந்து வந்த ஆள். இந்தியில் மித்ரோன், லவ்யாத்ரி என்ற படங்களில் துணைப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
சுகாஸ்
கலர் போட்டோ படத்தில் ஆணவக்கொலைக்கு பலியாகும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரராக நடித்து அசத்தியிருப்பார். ஜெயகிருஷ்ணா என்ற பாத்திரம் கருப்பு நிறமுள்ள பல்வேறு இளைஞர்களை பிரதிபலித்தது. நிறத்திற்காக வெளிநாட்டு நிறுவனப் பிரதிநிதி வரும்போது மேடையில் பேசும் வாய்ப்பு மறுக்கப்படும். அதை சவாலாக ஏற்று பேசும் காட்சி பிரமாதமாக இருக்கும். உணர்ச்சிகரமான படத்தில் நடித்தவர், காமெடியையும் கைவிடவில்லை. உமா மகேஸ்வரா உக்ரா ரூபாஸ்யாய படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார். ஒரே ஆண்டில் இரண்டு வித்தியாசமான படங்களில் நடித்துள்ளார். எந்த பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய நடிகன் சுகாஸ்.
நந்தினி rai
பெருந்தொற்று காலத்தில் ஆறு படங்களில் நடித்து முடித்த சாதனையாளர். மெட்ரோ கதாலு என்ற படத்தில் நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றவர். சூட்அவுட் அஇல் அலையர் என்ற படத்தையும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லீம் கேரக்டர் என்பதற்காக தகானி மொழியையும் கற்றுக்கொண்டுவருகிறார். இந்த டெடிகேஷன் போதாதா என்ன?
அபிஷேக் பானர்ஜி
பாதாள் லோக் என்ற வெப் சீரிசில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டவர். இந்த சீரிசின் காஸ்டிங் டைரக்டரும் இவர்தான். இவரின் பாத்திரமாக ஹத்தோடா தியாகி இந்திய ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பாத்திரம். இப்போது இவர் நடிப்பில் அன்பாஸ்டு என்ற படம் வெளியாகியுள்ளது. மிர்சாபூர் 2வில் நடித்துவருகிறார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
நவீன் தர்ஷன்
கருத்துகள்
கருத்துரையிடுக