வணிகத்தில் கிடைத்த பணத்தை ஏழைமக்களுக்கு செலவிட்ட மசாலா மகாராஜா!

 

 

 

 

 

 

Mahashay Dharampal Gulati Padma Bhushan.jpg

 

 

 

அஞ்சலி


மசாலா மகாராஜா


மகாசாய் தரம்பால் குலாத்தி



இவரது பெயரைச்சொல்வதை விட எம்டிஹெச் மசாலா கம்பெனி விளம்பரத்தில் வரும் பெரியவர் என்று சொல்லிவிடலாம். 1933ஆம் ஆண்டு தொடங்கி 2020ஆம் ஆண்டு டிசம்பர் 3 வரை இவரது மசாலா நிறுவனத்தின் தீம் மாறவில்லை. ஆனால் விற்பனை புதிய மசாலா கம்பெனிகள் வந்தாலும் கூடிக்கொண்டேயிருக்கிறது.


குலாத்தியின் குடும்பமே மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இவருக்கு ஆறு மகள்கள், ஒரு பையன். பையன் வெளிநாடுகளில் வியாபாரங்களை ஏற்றுமதி செய்வதை பார்க்கிறார். பெண்கள் உள்நாடுகளில் விநியோகத்தை கவனிக்கிறார்கள்.


குலாத்தியின் தந்தை சுன்னி லால் பாகிஸ்தானின் சிலாய்கோரில் சிறிய மசாலா கடையைத் தொடங்கினார். அந்த நிறுவனம்தான் இன்று 2 ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது. தந்தையின் தொழிலுக்கு குலாத்தி விரும்பியெல்லாம் வரவில்லை. படிப்பை நிறுத்திவிட்டுத்தான் வந்தார். மிளகாய்த்தூள் விற்பனை அப்போது சிறப்பாக நடந்து வந்தது. முதலில் குலாத்தி தொடங்கிய கடை மசாலாவுக்கானது அல்ல. தன்னுடைய முயற்சி என்ற வகையில் கண்ணாடிகள், காய்கறிகள் விற்பனை என்று தொடங்கினார். ஆனால் கடை நஷ்டத்தில் மூழ்க அப்பாவின் உதவியை நாடினார்.


1947இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் பாக்கிலிருந்து இந்தியாவுக்கு வந்த குடும்பம் குலாத்தியினுடையது. அவரது குடும்பம் டில்லியிலுள்ள அகதிகள் முகாமில் தங்கியது. 1953ஆம் ஆண்டு சா்ந்தினி சௌக்கில் சிறிய கடையை வாடகை்கு பிடித்து மசாலா கம்பெனியைத் தொடங்கினார். இதற்கான பணத்தை பல்வேறு சின்ன சின்ன வேலைகளைச் செய்து சம்பாதித்தார். 1959இல் கரோல்பாக்கில் சொந்த இடம் வாங்கி எம்டிஹெச் நிறுவனம் காலூன்றிது. இவரிடம் மூன்று மசாலாக்கள்தான் புகழ்பெற்றவை. டெக்கி மிர்ச், சன்னா மசாலா, சாட் மசாலா. இன்று இவை மூன்றுமே மாத த்திற்கு ஒரு கோடிப் பாக்கெட்டுகளுக்கும் அதிகமாக விற்கின்றன.


அப்படி வீயாபாரம் செய்யும்போதே தானம் செய்யும் பழக்கத்தையும் தொடங்கிவிட்டார். சேர்த்து வைத்த பணத்தில் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டியுள்ளார். எனது சம்பாத்தியத்தில் 90 சதவீதம் ஏழைகளுக்கு சென்று சேர்ந்து வருகிறது. தினசரி 15 மணி நேரம் உழைத்துத்தான் எம்டிஹெச் என்ற பிராண்டை குலாத்தி உருவாக்கினார்.


பிஎஸ்


கருத்துகள்