விவசாய கழிவுகளை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்? பஞ்சாப் அரசு முன்னெடுக்கும் புதிய செயல்முறை
வி்வசாயக்கழிவுகள் மூலம் மின் உற்பத்தி!
உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மெல்ல மூடப்பட்டு வருகின்றன.
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகளவு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது. எனவே, உலக நாடுகள் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை மெல்ல மூடி புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்து வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா நகரில் செயல்பட்டு வந்த குருநானக் தேவ் மின்னாலை மூடப்பட்டது. அந்த இடமும் கூட விற்கப்பட்டுவிட்ட செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்திய மின்சார ஆணையம், ஜப்பானிய நிலக்கரி ஆற்றல் மையம் ஆகிய இரு நிறுவனங்களு்ம் இணைந்து இனி விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு, கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாடும் தடுக்கப்படும். 2018ஆம் ஆண்டு மேற்சொன்ன இரு நிறுவனங்களும் செய்த ஆய்வு அடிப்படையில், 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக மாற்றியுள்ளனர். பஞ்சாப் மின்சாரவாரியம், 120 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை வைக்கோலை எரித்து மின்சாரம் பெறும்படி மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம் மின்சார உற்பத்தி செலவு குறைவதோடு, மக்களுக்கும் மின்கட்டணம் குறையும்.
நிலக்கரியின் பயன்பாட்டு அளவை குறைத்து விவசாய கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தும் கோஃபயரிங் முறை இன்னும் இந்தியாவில் பிரபலம் ஆகவில்லை. இம்முறையில் இந்தியாவில் ஆண்டுதோறும் உருவாகும் 58,96,700 மெட்ரிக் டன்கள் கழிவுகளில் 16,32,932 மெட்ரிக் டன்களை மின்சார உற்பத்திக்காக பயன்படுத்த முடியும். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 60 சதவீத விவசாய கழிவுகள் (9,07,184 மெட்ரிக் டன்கள்) நெருப்பிட்டு அழிக்கப்படுகின்றன.
ஒரு டன் விவசாய கழிவிலிருந்து 11 கி.கி கார்பன் மோனாக்சைடு, 4.9 கி.கி நைட்ரஜன் ஆக்சைடு, 1.2கி.கி சல்பர் டை ஆக்சைடு ஆகிய வாயுக்கள் வெளியாகின்றன. கோ ஃபயரிங் முறையில் இவற்றை வீணாக்காமல் பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்கமுடியும். இதற்கென சந்தை உருவாவதோடு நிலக்கரி பயன்பாட்டையும் மெல்ல நிறுத்தலாம். டில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சூழல் மையம் இதுபற்றி ஆராய்ந்து கார்பனை 47 சதவீதம் இம்முறையில் தடுக்கமுடியும். கிராமப்புறங்களில் வணிக வாய்ப்பும் ஏற்படும் என்று கூறியுள்ளது. தொழிற்சாலைகள் விவசாயக் கழிவுகளை ரூ.2500க்கும் பெற்றால், விவசாயிகளுக்கு தோராயமாக 1500 ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதுள்ள மின்சார அமைப்பு கட்டமைப்பில் விவசாய கழிவுகளை 5-10 சதவீதம் பயன்படுத்த முடியும். 10-20 சதவீதம் வரை பயன்படுத்தினால் மின்சார உற்பத்தி செலவு பெருமளவு குறையும். நிலக்கரி, விவசாயக்கழிவுகளை என இரண்டையும் மின்சார உற்பத்தி நிலையங்களில் மாற்றி மாற்றி பயன்படுத்தும்போது, அதன் ஆயுட்காலத்தையும் 40முதல் 50 ஆண்டுகளாக நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. உலகளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் கோஃபயரிங் முறைக்கு மெல்ல மாறி வருகின்றன. ஆசிய நாடுகளில் ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் இம்முறை நடைமுறையில் உள்ளது. ஜப்பான் எரிபொருள் கலப்பில் 84 சதவீதம் விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி வருகிறது. இந்தியாவில் மத்திய அரசு விவசாய கழிவுகளுக்கான விலையை திட்டமிட்டு முறைப்படுத்தினால் விவசாயிகளும், மின் உற்பத்தி நிலையங்களும் பயன்பெறுவர்.
தகவல்
Down to earth
Ready to swap?
Vinay trivedi 1-15 oct 2020 down to earth
thanks
dinamalar pattam
image
pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக