தம்பியின் டீம் ஜெயிக்க ஆவியாகி வந்து உதவும் அண்ணன்! - சிக்ஸ்த் மேன் 1997
சிக்ஸ்த்மேன் 1997
Music by | Marcus Miller |
---|---|
Cinematography | Mike Ozier |
பேஸ்கட் பால் விளையாட்டுதான் வாழ்க்கை. அதற்குப்பிறகுதான் பிற விஷயங்கள் என்று நினைக்கும் குடும்பம். அதில் ஆண்டன், கெனி என இரு சகோதர ர்கள். இதில் அண்ணன் வெகு சாமர்த்தியசாலி. இவர்களுக்கு கோச் வேறு யாருமில்லை. அவர்களது தந்தைதான். இந்த நிலையில் சிறப்பாக விளையாடி ஆண்டன் புகழ்பெற நினைக்கிறான். ஆனால் ஒரு விளையாட்டில் கோல் போடும்போது மாரடைப்பு வந்து சடக்கென இறந்துவிடுகிறான். அவன் நினைத்தபடி அவனது டீம் சாம்பியன் பட்டம் வென்றார்களா இல்லையா என்பதுதான் படம்.
படம் முழுக்க காதல், தூக்கலாக காமெடி, கொஞ்சம் நெகிழ்ச்சி நிரம்பியுள்ளது. முழுக்க பேஸ்கட்பால் கோர்ட், ஸ்கோர்போர்டு என்று நடைபெறுகிற படம் என்பதால் சிலருக்கு சலிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதற்குத்தான் பேன்டசி சமாச்சாரத்தை சேர்த்திருக்கிறார்கள்.
ஆண்டனைத் தவிர பிறருக்கு அவ்வளவு சமர்த்து பத்தாது. அல்லது அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க கேப்டன் ஆண்டன் தவறிவிட்டார் என கொள்ளலாம். அவரது தம்பி கேனியும் அந்த லெவல்தான். இதனால் ஆண்டன் இறந்தபிறகு அனைத்து மேட்ச்களிலும் டீம் தோற்கிறது. ஆண்டன் நிழலில் வாழ்ந்த கேனிக்கும் என்ன செய்வதென தெரியவில்லை. இதனால் அவனின் ஆட்டமும் சொதப்புகிறது. குறிப்பாக பந்தை யாருக்கு பாஸ் செய்வதெனக்கூட தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
இந்த நேரத்தில் குலதெய்வத்தை வேண்டி துணைக்கு கூப்பிடுவது போல, ஆண்டனைக் கூப்பிட அவன் வந்து ஹஸ்கீஸ் டீமை எப்படி ஜெயிக்க வைக்கிறான் என்பதை ஹரி படத்தின் வேகத்தைப் போல காட்டியிருக்கிறார்கள். கேனி இதே நேரத்தில் விளையாட்டு விமர்சனங்களை எழுதும் ஆர்சி என்ற பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். ஆனால் அவள் நேர்மையானவள் கிடையாது. என்னைப் பற்றிய ரகசியங்களை தெரிந்துகொள்ள நினைக்கிறாள் என ஆண்டன் கெனியை தடுக்கிறான். இதற்கு இடையில் ஆண்டன் உதவினாலும் கூட கெனியின் டீம் மேட்களுக்கு ்நாம் விளையாட்டில் அனைவரையும் ஏமாற்றுகிறோம் என்று தோன்றுகிறது. இதனால் ஆண்டன் நம்மோடு வேண்டாம் என்று சொல்லுகிறார்கள். இந்த நிலையில் இறுதிப்போட்டி வேறு அருகில் வந்துவிடுகிறது. இதில் எப்படி ஆண்டனின் உதவியின்றி வெல்லுகிறார்கள் என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.
உன்னை மட்டும் நம்பு
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக