பாதாளச்சாக்கடைகளின் மூடி வட்டமாக இருப்பது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ?
கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசிப்பது ஆபத்தானதா?
கார்பன் உள்ள பொருட்களை எரித்தால் உருவாகும் வாயுவின் பெயர்தான் கார்பன் மோனாக்சைடு. மோசமான வாயுக்கள் சுவாசிக்க தடுமாற்றம் தரும் வாசம் வரும். கார்பன்மோனாக்சைடை ஒருவர் சுவாசிக்கும்போது அதனை அறிய முடியாது. காரணம், இதற்கு நிறம். வாசனை கிடையாது. இந்த வாயுவால் நிறைய மக்கள் அமெரிக்காவில் இறந்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்த வாயுவை தற்செயலாக சுவாசித்து நிறைய மக்கள் இறப்பை எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் இப்படி ஆண்டுதோறும் 170பேர் இறந்துள்ளனர். சிலர் இதனை தற்கொலைக்கும் பயன்படுத்துகின்றனர். இன்று தயாரிக்கப்படும் கார்கள் பலவும் 70 சதவீதம் கார்பன் மோனாக்சைடை குறைத்து வெளியிடுகின்றன. மரங்களை வெட்டி எரிப்பது, எரிவாயுவில் இயங்கும் ஜெனரேட்டர்கள் ஆகியவை கார்பன் மோனாக்சைடுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. ஒருவர் இந்த வாயுவை சுவாசிக்கும்போது அவருக்கு சுவாசிப்பது கடுமையாகும்.
ரத்தவோட்டத்தில் ஆக்சிஜனை விட எளிதாக இந்த வாயு கலப்பதால், உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையாகும். இதன் விளைவாக, குமட்டல், தலைவலி ஏற்படும். இறுதியில் மூளையில் ரத்தவோட்டம் குறைந்து இறப்பு ஏற்படும். இயற்கை எரிவாயுவுக்கும் இந்த தன்மை உண்டு. எனவே இதில் கசிவு ஏற்பட்டால் கண்டுபிடிக்க எத்தில் மெர்காப்டன் என்ற வேதிப்பொருளை கலக்கிறார்கள்.
நீர் ஆக்சிஜன், ஹைட்ரஜனால் இணைந்து உருவாகிறது. ஆனால் இந்த இரண்டு வேதிப்பொருட்களும் ஏன் எரிவதில்லை?
ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் ஒன்றாக எரிந்து கிடைக்கும் சாம்பல்தான் நீர் என நினைத்துக்கொள்ளுங்கள். எந்த வேதிப்பொருட்கள் எரிந்தாலும் சூடானும் அவற்றின் அணுவரிசையின் ஆற்றல் குறைந்துவிடும். இதனால் நீர் எரியாது. மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை நெருப்பிட்டு எரிக்கும்போது சாம்பலாகிறது. சாம்பல் திரும்ப எரியாது. ஏனெனில் அதில் உள்ள அனைத்து மூலக்கூறுகளும் மிக குறைவான ஆற்றலைப் பெற்றுள்ளன.
நீரிலுள்ள ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் ஆற்றல் ஆதாரங்கள் மூலம் பிரிக்கலாம். அப்படி பிடித்தால் தூய சக்தி ஆதாரமான ஹைட்ரஜனைப் பிரிக்கலாம். இதனை எரிபொருளாக பயன்படுத்தலாம்.
பாதாளச்சாக்கடைகள் ஏன் வட்டமாக உள்ளன?
இந்தக்கேள்வியை மைக்ரோசாப்ட் நிறுவன நேர்காணலில் கேட்பதாக சிலர் கூறுவார்கள். பாதாளச்சாக்கடை துளையை விட வட்டவடிவில் உள்ள மூடி அளவில் பெரியது. ஒருவர் இதில் தவறி கீழே விழுந்து உயிர் போக அதிக வாய்ப்பில்லை. இதே மூடி செவ்வகம், சதுரமாக இருந்தால் ஒருவர் கீழே விழுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் இன்னொரு சாதகமான அம்சம், இதில் சேதாரம் குறைவாக இருப்பது. இதனை எந்திரங்களில் வடிவமைப்பதும் எளிது. இதனை அதிக எடையுள்ளதாக இருந்தாலும் தூக்கிச்செல்வது சாத்தியம். இவை அதிக எடையுள்ளதாக இருப்பதால்தான் லாரி, கார் ஆகியவை இதன் மீது செல்லும்போதும் பாதிப்படைவதில்லை. ஆனால் ரேஸ்கார்கள் இதன்மீது செல்லும்போது ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. 1990இல் மாண்டிரியலில் நடந்த பந்தயத்தில் போர்ச் கார் இதன் மீது வேகமாக சென்றதில், கார் மூடி பறந்து வந்து அடுத்து வந்த காரில் மோதி தீப்பிடிக்க, பந்தயம் உடனே நிறுத்தப்பட்ட சோக சம்பவம் நடைபெற்றது. இதற்கு காரணம் காற்றழுத்த வெற்றிடம் என விளக்கம் அளிக்கப்பட்டது.
ask a teacher
கருத்துகள்
கருத்துரையிடுக