2020ஆம் ஆண்டின் முக்கியமான அறிவியல் செய்திகள் ஐந்து!

 

 

 

 

 

 

 

 

 

 A researcher holds the 3D-printed prototype of a human heart.

 

 

 

முக்கியமான அறிவியல் செய்திகள் 2020


விண்ணில் பெண்!


ஆர்டெமிஸ் விண்வெளித் திட்டத்தில் பெண்களும் பங்கேற்பார்கள் என நாசா நிறுவனம் செப்டம்பரில் அறிவித்தது பலரையும் கவர்ந்தது. எஸ்எல்எஸ் எனும் லாஞ்ச் சிஸ்டத்தை தயாரித்து வருகிறது. ஓரியன் விண்கலத்தை இதற்கு பயன்படுத்தவிருக்கிறது. இந்த திட்டம் நவம்பர் 2021இல் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த நாட்கள் விண்வெளியில் இருப்பது என 26 நாட்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் ஆறு நாட்கள் நிலவைச்சுற்றி வரும் திட்டம் உண்டு. ஆர்டெமிஸ் 2 திட்டம் 2023இல் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். இந்த திட்டம் வெற்றிபெற்றால் அப்போலாவுக்கு பிறகு 1972க்குப் பிறகு வெற்றிகரமாக மனிதர்களோடு நிலவுக்குசெல்லும் திட்டம் இதுவாகவே இருக்கும்.


ஆர்டெமிஸ் 3 என்பது மனிதர்கள் நிலவுக்கு செல்லும் திட்டத்தைக் கொண்டது.இது வெற்றியடைந்தால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்வது சாத்தியமானது என்று வரலாற்றில் பதிவாகலாம்.


புற்றுநோயை குணமாக்க முடியும்


நடப்பு ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய் செல்களை செயலிழக்க வைக்கும் என்சைம் ஒன்றை கண்டுபிடித்தனர். பிபி2ஏ எனும் என்சைம் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த என்சைமை ஈர்க்கும்படியான பொருட்களை உருவாக்கினால் அது புற்றுநோய் செல்களின் பரவுதலைக் குறைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சிளார்கள் ஓஹியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டெரக் டெய்லர்.


கிரிஸ்பிஆர் எனும் மருந்து


மார்ச் மாதம் கிரிஸ்பிஆரை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தமுடியுமா என்று சோதித்தனர். குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வைத்திறன் குறைபாடான லெபர்ஸ் காக்ஜெனிடல் அமாரோசிஸ் 10 என்பதை குறைந்த விலையில் தீர்க்க ஆய்வாளர்கள் முயல்கின்றனர். இதன்மூலம் பார்வைத்திறன் இழப்பை ஏற்படுத்தும் செல்களை வெட்டி வீசிவிட்டால் போதுமே! இதனை மருந்து நிறுவனமான எடிடாஸ் , அலெர்ஜன் ஆகியவை செய்து வருகின்றன.


நாய்களின் மீதான காதல்


நூற்றாண்டு காலமாக நாய்களின் மீதான காதல் மனிதர்களுக்கு உள்ளது ஆய்வுகள் கூறியுள்ளன. இதுபற்றிய ஆய்வு பிரன்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 ஆயிரம் ஆண்டுகளாக இந்த உறவு வளர்ந்து வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஐஸ்ஏஜ் காலத்திலிருந்து நாய்கள் நிறைய மாறி வளர்ந்துள்ளன என்று மருத்துவர் பான்டஸ் ஸ்கோக்லண்ட் கூறியுள்ளார். தொன்மைக்காலத்தில் மனிதர்கள் நாய்களை பெரிதும் விரும்பியுள்ளனர். அவர்கள் எங்கு இடம்பெயர்ந்தாலும் நாய்களை கைவிடாமல் அதனை கூட்டிச்சென்றுள்ளனர். ஸ்வீடனில் உள்ள விவசாயிகள் கிழக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தபோது நாய்களை தங்களோடு கூட்டிச்சென்றுள்ளனர்.


3டி பிரிண்டிங்கில் இதயம்


ஜூலையில் வெளியிடப்பட்ட ஆய்வில் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 3டி பிரிண்டிங்கில் உருவான இதயம் சிறப்பாக செயல்படுவதாக கூறியிருக்கிறார்கள்.


மனித ஸ்டெம்செல்லை வைத்து இதயத்தை 3டி முறையில் வெற்றிகரமாக உருவாக்கி செயல்படவைத்திருக்கிறார்கள். நாங்கள் உருவாக்கிய இதயத்தில் ரத்தம் செல்வது எங்களால் நம்பவே முடியவில்லை என்று பேசினார் ஆராய்ச்சியாளர் பிரெண்டா ஆக்லே.


இந்த ஆராய்ச்சி மூலம் இதயம் எப்படிப்பட்டது, அதில் ரத்தம் எப்படி பாய்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சிறப்பாக புரிந்துகொண்டிருக்கின்றனர். இப்போது இதனை பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கும் சேதமானவற்றுக்கும் பயன்படுத்த முடியுமா என்று சோதித்து வருகின்றனர். இங்கிலாந்தில் இதயநோய்களால் மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் இறந்துவருகின்றனர்.


 

கருத்துகள்