காட்டு விலங்குகளை பாதுகாக்க முயலும் கரடியும் மானும்! - ஓபன் சீசன் -1
ஓபன் சீசன்2006
முதல் பாகம்
Directed by | Roger Allers Jill Culton |
---|---|
Produced by | Michelle Murdocca |
Screenplay by | Steve Bencich Ron J. Friedman Nat Mauldin |
Story by | Jill Culton Anthony Stacchi |
Based on | An original story by Steve Moore John B. Carls |
பூக் என்ற கரடிதான் படத்தின் ஹீரோ. வேட்டைக்காரன் ஒருவன் மானை வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயல, அதில் மயக்கமுற்று கரடியால் உயிர்பிழைக்கும் மான், கரடியின் ஒரே ஆத்ம நண்பனாகிறது. கரடிதான் தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இன்சார்ஜ் என்கிறது.
மான் அத்தியாயம் பின்னால்தான் வருகிறது. அதற்கு முன்னால் கரடியை ரேஞ்சர் பெண்மணி பராமரித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரை அதன் வளர்ப்பு பிராணி போல நடத்துகிறார். அதை வைத்து வித்தைகாட்டி அவர் சம்பாதிக்கிறார். ஆனால் கரடிக்கு காட்டில் எப்படி உணவு பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது. அப்போது கொம்பு உடைந்த மானின் நட்பு கிடைக்க, காட்டுக்குள் கிடைக்கும் சுதந்திரம் கரடிக்கு தேவைப்படுகிறது. மேலும் சாப்பிட நிறைய தீனியை மானும் கரடியும் சென்று வேட்டையாட சூப்பர் மார்க்கெட் சுமார் மார்க்கெட்டாகி நாஸ்தியாகிறது.
மேலும் ரேஞ்சர் பெத் நடத்தும் ஷோவிலும் கூட மான் வேட்டைக்காரனுக்கு பயந்து உள்ளே புக பார்வையாளர்கள் தெறித்து ஓடுகிறார்கள். இதனால் பெத் கரடியை காட்டில் கொண்டுபோய் விட நினைக்கிறாள். இது கரடிக்கு தெரியாது. அப்படி தெரிய வரும்போது என்னாகிறது? இத்தனைக்கும் கொண்டுபோய் விடும் சமயத்தில்தான் அங்கு காட்டுவிலங்குகளை வேட்டையாடும் சீசன் தொடங்கவிருக்கிறது. மானைக் காப்பாற்றிய கரடியை ஒரேயடியாக இந்த சீசனில் தொலைத்துக் கட்ட வேட்டைக்காரர் சபதம் எடுக்கிறார். அது நிறைவேறியதா இல்லையா என படத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. சோனியின் அனிமேஷன் பிரிவின் தயாரிப்பு.
கதை, சொன்ன விதம், கதையின் பின்னணி, விலங்குகள் என அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது.
விலங்குகளை விலங்குகளாக காட்டில் வாழவிடுங்கள் என்பதை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள்.
மறக்கமுடியாத காடு
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக