சைக்கிள் கற்பது எப்போதும் மறப்பதில்லை, என்ன காரணம்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

 

 

 

 

Sunset, Cycling, Bridge, Cyclist, Man, Outdoor

 

 

பதில் சொல்லுங்க ப்ரோ?


சைக்கிள் கற்பது எளிதில் மறப்பது இல்லை ஏன்?


சைக்கிளை குரங்கு பெடல் போட்டு பலரின் இடுப்பின் மீது விட்டு கற்றவர்களுக்கு அது எப்படி எளிதில் மறக்கும்? பலருக்கும் சைக்கிளை பழகி பல்லாண்டுகள் ஆனபிறகும் சைக்கிளை எப்படி ஓட்டுவது என்பது மறப்பது இல்லை. சைக்கிள் ஓட்டுவது பெரிய விஷயமாக பலருக்கும் தெரியாது. ஆனால் இதில் முழு உடலும் அலர்ட்டாக இருப்பது முக்கியம். அப்போதுதான் மூளை நினைத்த விஷயங்களை உடல் செயல்படுத்த முடியும். உடலின் மோட்டார் அமைப்பின் செயல்பாடு, தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவை நீங்கள் பெடல் போடும்போது சரியாக அமையவேண்டும். இல்லையெனில் சைக்கிள் எங்காவது மோதி சரிந்துவிடும். விளைவாக உங்கள் முட்டி பெயர்ந்து விடும்.


மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் ஜூர்ஜென் கான்சாக் செரிபிரல் ஒருங்கிணைவு சைக்கிள் ஓட்டுதலை சாத்தியமாக்குகிறது என்று கூறுகிறார். சைக்கிள் ஓட்டுவது மட்டுமல்லாது நடனம், விளையாடுவது, நடப்பது ஆகியவை செய்யும்போதும் அவசியமாகிறது. இவை சரியாக இல்லாதபோது இந்த செயல்பாடு நடைபெறாது. வாழ்க்கை முழுக்க மறக்காத திறன் என்று கூறலாம்.


Peony, Bud, Ants, Rain, Drip, Raindrop, Nature, Macro 

 

விலங்குகளின் மூளை செயல்பாடு எப்படியிருக்கும்?


ஒரு நொடிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியூரான்கள் 200க்கும் மேற்பட்ட முறை தகவல்பரிமாற்றத்தைச் செய்கின்றன. இவைதான் இயற்கணித பிரச்னைகள் முதல் முச்சந்தியில் எங்கு திரும்பவேண்டும் என்ற முடிவை எடுக்கவும் உதவுகின்றன. விலங்குகளுக்கு மனிதர்களைப் போல செரிபிரல் அமைப்பு கிடையாது. எனவே, அவற்றின் செயல்பாடுக்கு நோஜின்கள் என்ற அமைப்பு உதவுகிறது.


எறும்புகளின் மூளை நம்மை விட ஆயிரம் மடங்கு சிறியது. அவற்றின் தகவல்தொடர்புத்திறன் மூளை மூலம்தான் நடைபெறுகிறது. அவற்றின் மூளையிலிருந்து வெளிப்படும் பெரோமோன்ஸ் உணவு, வாழும் இடம் ஆகியவற்றை அடையாளம் காட்ட உதவுகிறது. பெரோமோன்ஸ் மணத்தை நுகர்ந்தபடியே எறும்புகள் வாழ்கி்ன்றன. மூளையில்லாத பிளாஸ்மோடியல் ஸ்லைம் மோல்ஸ், நிலத்திலுள்ள உப்பை தன்னுடலில் சேமிக்கிறது. அதிலுள்ள சோடியத்தை பாதுகாப்பான அளவில் உடலில் சேர்த்துக்கொள்வது உறுதிசெய்துகொள்கிறது.

Woman, Boat, Sky, Sunset, Waters, Dusk, Sea, Romantic

ஓய்வாக இருப்பது உற்பத்திதிறனை பெருக்குமா?


எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பது வேலையிலும் நமது செயல்பாடுகளிலும் ஒரே தேக்கத்தை உருவாக்கும். எனவே, அதிலிருந்து விலகி கடற்கரைக்கு செல்வது, நாயுடன் விளையாடுவது, நீந்துவது என எப்போதும செய்யும் சமாச்சாரங்களை செய்யலாம். அல்லது உங்களுக்கு பிடித்து வேறு விஷயங்களை செய்யலாம். ஆனால் பிடித்த நெட்பிளிக்ஸ் படத்தை பார்க்கிறேன் என்று கூறாதீர்கள். அப்படி டிவி பார்த்து ரசிக்க மூளையிலுள்ள ஆற்றல் செலவாகும்.


எதையும் செய்யாமல் சும்மா இருப்பதே உடலில் ஏற்படும் பதற்றம், மன அழுத்தம், நினைவுத்திறன் ஆகியவற்றை கூட்டும் என்கிறார்கள் சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை யோசித்து பார்க்கவும் நேரம் தேவை அல்லவா?

popular science



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்