வாரி வழங்கும் ஆசிய பணக்காரர்கள்! கல்வி, சமூகம், வறுமை ஆகியவற்றுக்கே முதலிடம்

 

 

 

Man, Rich, Treasure, Money, Business, Investment
asia rich mans- pixabay

 

 

 

மானுவேல் வில்லர்


விஸ்டா மால் அண்ட் விஸ்டா லேண்ட் அண்ட் லேண்ட்ஸ்கேப்ஸ்


பிலிப்பைன்ஸ்


நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தக்காரர். இரண்டு ஹெக்டேர் நிலத்தை கத்தோலிக்க பள்ளி கட்டுவதற்கு தானமாக அளித்துள்ளார். பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு ஐந்து ஹெக்டேர் நிலத்தை தானமாக அளித்துள்ளார். மேற்சொன்ன தான நடவடிக்கையின் மதிப்பு 165 மில்லியன் டாலர்கள். நான்கு பிலிப்பைன்ஸ் பள்ளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்துகொடுத்துள்ளார். தேவாலயங்களுக்கான நிதியுதவி, கொரோனாவுக்கு எதிரான பல்வேறு பொருட்கள் என வழங்கி வருகிறார்.


எலினார் க்வோக் லா க்வாய் சுன்

சா சா இன்டர்நேஷனல்


ஹாங்காங்


ஆசியாவின் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனமான சா சா நிறுவனத்தின் துணை நிறுவனர் சுன்தான். இவர் தற்போது துணைத்தலைவராக நிறுவனத்தில் உள்ளார். 9 மில்லியன் டாலர்களை பல்வேறு அறப்பணிகளுக்கு வழங்கியுள்ளார். 19ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த போ லியுங் குக் என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிறுவனத்திற்கு நிதியுதவியை அளித்துள்ளார். கடந்த ஆண்டு இயற்கை பாதுகாப்புக்கு 1.5 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார். அறிவியல், கலாசாரம், மருத்துவம் ஆகியவற்றுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகிறார். 2013-14 காலகட்டத்தில் ஹாங்காங் அறி்வியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு 5 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார்.



யாசுகு மேஸாவா


ஸோஸோ நிறுவன முன்னாள் தலைவர்


ஜப்பான்


சில்லறை விற்பனை நிறுவனத்தின் தலைவர்.. குறைந்தபட்ச மாத ஊதிய திட்டத்தை விழிப்புணர்வு செய்ய 9.5 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் தன்னைப் பின்பற்றுபவர்களில் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து நிதியுதவிகளை வழங்கியுள்ளார்.


சைமன் லின்


விஸ்ட்ரன்


தைவான்


2019ஆம் ஆண்டு லின் 5.2 மில்லியன் டாலர்களை துங் பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவியாக வழங்கினார். இந்த நிதி மூலம் செயற்கை நுண்ணறிவு பற்றி ஆண்டுதோறும் வல்லுநர்கள் பல்கலைக்கழத்திற்கு வந்து பேசுவார்கள். விஸ்ட்ரான் பவுண்டேஷன் மூலம் இயற்கை பாதுகாப்பிற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்துவருகிறார்.





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்