வேடிக்கையான சலிப்பூட்டாத டிஜிட்டல் அருங்காட்சியகம்!
sample picture-pixabay |
அபிஷேக் போடார்
மியூசியம் ஆப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி
நீங்கள் பல்வேறு பிரபலமான கலைஞர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளீர்கள். அவர்களைப் பற்றிய சுவாரசியங்கள் ஏதேனும் பகிருங்கள்.
கலைஞர் மீரா முகர்ஜியை எனது சகோதரி திருமணத்திற்கு அழைத்திருந்தேன். வந்தவருக்கு அணிகலன் ஒன்றை பரிசாக கொடுத்தேன். அடுத்தமுறை அவரது வீட்டுக்கு சென்றபோது, அப்பரிசு அவரது வீட்டு வேலையாளின் உடலில் இருந்தது. அதனை கவனித்தனவர். நான் அதிகம் எங்கும் செல்வதில்லை. சிலமுறை போட்டுப் பார்த்தேன். பிறகு அவளுக்கு கொடுத்துவிட்டேன். நீ எனக்கு கொடுத்தபிறகு அது எனக்கு சொந்தம். எனது விருப்பம் போல அவளுக்கு கொடுத்தேன் என்று சொன்னார். ஓவியக்கலைஞர் எம்எஃப் ஹூசைன் வெளிநாட்டில் இருந்தபோது, அவரை நான் சந்தித்தேன். நான் அவரிடம் எதை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டேன். இந்திய மண்ணைத்தான் என்று சொன்னார். இப்படி சொல்ல என்னிடம் நிறைய கதைகள் உண்டு. ஆனால் அவை அனைத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூரவைப்பவைதான்.
கலை சார்ந்த விஷயத்தில் உங்களை ஈர்த்தது என்ன?
சில ஆண்டுகளுக்கு முன்னர் டிஎஸ் சத்யன் என்ற புகைப்பட பத்திரிகையாளர் தனது படைப்புகளை எங்களுக்கு வழங்கினார். கடந்த ஆண்டு ஜெர்ரி ராவ் என்ற தொழிலதிபர் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை வழங்கினார். இதில் மஞ்சித் பாவா, பிரபாகர் பார்வே, ஜெய்தேவ் பாஹெல் ஆகியோரின் படைப்புகள் உள்ளடங்கும்.
இந்தியாவில் அருங்காட்சியகம் என்ற கலாசாரமே கிடையாது. பெருந்தொற்று இந்த விவகாரத்தில் மாற்றம் ஏற்படுத்துமா?
இந்தியாவில் அருங்காட்சியகம் செல்வது மிகவும் குறைவாகவே உள்ளது. பெருந்தொற்று காரணமாக பொது இடங்கள் அனைத்தும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் என்றால் அழுக்கான சலிப்பூட்டும் இடங்களாக பலரும் பார்த்திருப்பார்கள். நாங்கள் அதனை வேடிக்கையான உற்சாகமுட்டும் இடமாக மாற்றவேண்டும் என முயன்று வருகிறோம். எங்களது இந்த பேராசைக்கு இன்னொரு பரிமாணமாகவே பெருந்தொற்று உள்ளது.
அருங்காட்சியகத்தை 2021இல் திறந்திருக்கலாமே? அதற்குள் எதற்கு டிஜிட்டலாக திறந்துள்ளீர்கள்?
பெருந்தொற்றுதான் எங்களது தொழிலை டிஜிட்டல் வழியில் யோசிக்க வைத்தது. அருங்காட்சியகத்திற்கு நாம் செல்லும் விஷயங்களை டிஜிட்டல் உலகம் பெரிதும் மாற்றியமைத்துள்ளது. பல்வேறு டெக் நிறுவனங்கள் எங்களுக்கு தங்களின் தொழில்நுட்பத்தை வழங்கி கலை சார்ந்த விஷயங்களை மாற்றியுள்ளனர். நிறைய பொருட்களை நீங்கள் ஆன்லைனில் டூர் போல சென்று பார்க்கலாம். 3டி வடிவில் பார்க்கலாம். இதுபோல மாதம் 40 பொருட்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற நினைத்துள்ளோம்.
நீலம் ராஜ்
டைம்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக