செஸ்ஸை வேகமாக விளையாடினால் சந்தோஷம் கிடைக்காது! - விஸ்வநாதன் ஆனந்த், செஸ் விளையாட்டு சாதனையாளர்

 

 

 

 

 

 

Cartoonist Manoj Sinha

 

 


விஸ்வநாதன் ஆனந்த்

செஸ் வீரர்


பெருந்தொற்று காலத்தில் நிறைய மக்கள் செஸ் விளையாடி வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


செஸ் விளையாட நினைத்தவர்கள் கூட முன்னர் நேரமில்லாமல் தவித்தனர். ஆனால் இந்த ஆண்டில் நிறைய மக்கள் செஸ் விளையாடத் தொடங்கியுள்ளனர். நிறைய கடைகளில் செஸ் போர்டுகளோடு, அதற்கான கடிகாரங்களும் சிறப்பாக விற்பனையாகிவருகி்ன்றன. எனக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் உண்மையில் ஆச்சரியம் தருகிறது.


முன்னாள் சாம்பியனானா கார்ல்சன் வேகமாக செஸ் ஆடுவது பற்றி பயிற்சி அளிக்கிறார். அப்படியென்றால் கிளாசிக் செஸ் என்பது எப்படியிருக்கும்?


என்னுடைய தலைமுறையினர் கிளாசிக்கலான செஸ்ஸை விளையாடினர். ஆனால் அடுத்த தலைமுறை அதில் மாற்றம் ஏற்படுத்த விரும்புகிறது. உண்மையில் இந்த விளையாட்டு வேகமாக மாறினால் அதில் விளையாடும் சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. கிளாசிக் செஸ்ஸில் மாற்றங்களை ஏற்படுத்தி விளையாடவேண்டும் என்று் கார்ல்சன் கூறியுள்ளார். அது உண்மையும் கூடத்தான். ஆனால் வேகமாக செஸ் ஆடத்தொடங்கினால் பின்னாளில் பழைய நிலைக்கு செஸ் மாறுவது கடினம். கிரிக்கெட்டில் டெஸ்ட் கூட மாற்றப்பட்டுவிட்டால் பின்னர் பழைய நிலைக்கு திரும்பாது. ஆன்லைனில் இப்போது செஸ் ஆடி வருகிறார்கள். இது பழைய முறையில் நடைபெறவேண்டும் என்பதே எனது ஆசை.


ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படவேண்டாம் என கார்ல்சன் கூறியிருக்கிறாரே?


அவர் கூறியுள்ளார் என்றாலும் இதற்கு மாற்றாக எதுவுமே இல்லை என்பதுதான் இப்போதைய நிலைமை. அவர் வேகமாக செஸ் விளையாடும் போட்டிகளை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் இதில் வேகமான முடிவுகளுக்கு நான் வரவில்லை. நான் செஸ் விளையாட்டை தினந்தோறும் மூளையில் விளையாடிக்கொண்டுதான் உள்ளேன். இதன் முடிவு என்னவென்று தெரியவில்லை பார்ப்போம்.


இணையத்தில் செஸ் விளையாட்டை எளிதாக கற்க முடிவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


இதனால் அனைத்து மக்களுக்கும் எளிதாக செஸ் விளையாடு சென்று சேர்ந்துள்ளது. இணையத்தில் யூடியூபில் சர்ச் எஞ்சினே வைத்து தேடும்படி ஏகப்பட்ட யூடியூப் சானல்கள் செஸ்ஸை கற்றுத்தருகின்றன. நான் அப்படி ஒரு சானலைத் தொடங்கும் எண்ணத்திற்கு இன்னும் வரவில்லை. உலகிலுள்ள அனைத்து வீரர்களும் இதே ஐடியாவைத்தான் பின்பற்றி வருகிறார்கள். இணையத்தில் சொல்லித்தருவதை புரிந்துகொள்வதற்கு நீங்கள் ஓரளவேனும் விளையாட்டைப் புரிந்துகொள்ளவேண்டு்ம். அப்போதுதான் விளையாட்டை சிறப்பாக புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள முடியும்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்



கருத்துகள்