ஒரே நேரத்தில் மாநில அரசுகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம்தான்! - சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்

 

 

 

 

 Ballot, Election, Vote

 

 

 

சுனில் அரோரா


தேர்தல் ஆணையர்


Election Commission of India will never go back to era of ...

மேற்கு வங்க தேர்தலுக்கு மத்திய அரசின் பாதுகாப்புபடையினரை மாநிலஅரசு அனுமதிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே?


எங்களுக்குத் தேவையானபாதுகாப்பு படையினரை பற்றி மத்திய அரசிடம் பேசி வருகிறோம். இன்னும் எண்ணிக்கை முடிவாகவில்லை. இதுபற்றிய தகவலை இன்னும் மாநில அரசிடம் நாங்கள் பேசவில்லை.



தேர்தல் பத்திரம் பற்றி உங்கள் கருத்து என்ன? 2018ஆம் ஆண்டு பாஜக தவிர பிற கட்சிகள் தேர்தலுக்கு செலவிடுவது பற்றிய புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது பற்றி கூறுங்கள்?



உச்சநீதிமன்றத்தில் நாங்கள் எங்கள் தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளோம். தேர்தல் பத்திரம் என்பதை நாங்கள் வெளிப்படையானது என நம்புகிறோம். இன்றுவரை அதே கருத்தில்தான் உள்ளோம்.


பெருந்தொற்று காலத்தில் தேர்தல் செலவுகள் பற்றிய கவனம் தேவை. இதுதொடர்பாக ஹரிஷ்குமார் தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளோம். இவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி. அவர்களுடைய அறிக்கை கிடைத்துவிட்டால் இதுதொடர்பாக விரைவில் முடிவெடுத்து விடலாம்.


கோவிட் -19 காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேர்தலை நடத்த முடியும் என நினைக்கிறீர்களா?


நாங்கள் இப்போதுதான் பீகார் தேர்தலை முடித்துள்ளோம். மக்களவைத் தேர்தல் 2024இல் வருகிறது. அதனையும் சரியாக செய்வோம் என நம்புகிறேன். 1970இல் மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலையும் நாங்கள் ஒரே நேரத்தில் நடத்தவேண்டிய தேவை இருந்தது. இதற்கு அரசியலைப்புச்சட்டம் 83,85, 172 ஆகியவை இடம் அளிக்கின்றன. எனவே பிரதமர் மோடி கூறிய ஒரே சமயத்தில் நாடாளுமன்ற சட்டசபை தேர்தல்களை நடத்துவது எளிதானதுதான். சட்டத்துறை இதற்கு உதவும் என நம்புகிறேன். நாடாளுமன்றம் இதனை ஏற்றால் போதுமானது.


வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களின் வாக்குகளை பெறவும் தேர்தல் ஆணையம் முயல்வதாக கூறப்படுவது உண்மையா?


அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு சென்றவர்கள் வாக்களிக்க இந்தியாவுக்கு வந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்த நிர்பந்த த்தை தீர்க்க நாம் வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதற்காக சிறப்பான சட்ட விதிகள், வாக்குகளை பதிவு செய்வதற்கான முறை உள்ளன. வெளிநாடுகளில் இந்திய தூதரகம் செயல்படும். அங்குள்ள தூதர் மூலம் ஏதாவது செய்யமுடியுமா என்று பார்க்க முடிவு செய்துள்ளோம்.



நீங்கள் ஏதாவது சீர்திருத்தங்களை செய்யலாம் என்ற நினைத்திருக்கிறீர்களா?


நிறையமுறை நினைத்துள்ளேன். தேர்தல் அதிகாரிகளை மாநிலத்திற்கென நியமிப்போம். திடீரென அவர்கள் மீது பல்வேறு புகார்களை கூறிய குறிப்பிட்ட சார்பு சார்ந்து செயல்படுகிறார்கள் என குற்றம்சாட்டுவார்கள். இதனால் அவர்கள் செயல்படுவதற்கு முன்னரே அவர்களை பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள். இதனை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். அவருக்கு சரியான நேரம் கொடுக்காவிட்டால் நிலையை புரிந்துகொண்டு செயல்படுவது கடினமாகவே இருக்கும்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


ரித்திகா சோப்ரா




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்