சிறந்த கணினி பொருட்கள் 2020!

 

 

 

 

 

Samsung Galaxy Note 20 & Ultra Announced, Available ...

 

 

 



கம்ப்யூட்டர் கேமிற்கான டிவிக்கள்


சாம்சங் க்யூஎல்இடி க்யூ80டி


நல்ல பெரிய வீட்டை கட்டிவிட்டீர்கள் என்றால் அதில் செமையாக விளையாட இந்த டிவி உதவும். பிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் எக்ஸ் ஆகிய விளையாட்டு சாதனங்களுக்கு ஏற்றது. 65 இன்ச் அளவு கொண்டது. அசத்தும் க்யூஎல்இடி திரை உங்களுக்கு விளையாட்டு அனுபவத்தை பரவசமாக்கும்.



சோனி எக்ஸ்90ஹெச்


ஹெச்டிஎம்ஐ 2.1 அப்டேட் இல்லாமல் வந்துள்ள டிவி. பிளேஸ்டேஷன் விளையாட்டுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் டிவி என்பதால் விளையாட்டு பற்றி கவலைப் படாதீர்கள். மற்ற அம்சங்கள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன.


எல்ஜி சிஎக்ஸ்


அடுத்த தலைமுறை டிவி என்ற விளம்பரத்தோடு 55 இன்ச்சில் வெளிவந்துள்ளது எல்ஜி. எக்ஸ்பாக்ஸ் விளையாட்டை ஸ்மூத்தாக விளையாடலா்ம் என்று கூறப்பட்டுள்ளது. ஹெச்டிஎம்ஐ 2.1, 4கே, நொடிக்கு 120 பிரேம்கள் என விளையாட்டி்ற் கு ஏற்றபடி தயாரித்திருக்கிறார்கள்.


ஆபீஸூக்கு போகலாமா?


கிரியேட்டிவ் லைவ் கேம் சின்க் 1080பி


அனைத்து லேப்டாப்களிலும் வெப்கேம் உள்ளது. ஆனால் மீட்டிங்குகளில் சரியாக செயல்படுகிறதா என்றால் கஷ்டம்தான். கிரியேட்டிவ் நிறுவனத்தின் வெப்கேம் எந்த திசையிலும் திருப்பிக்கொள்ளும்படி தனித்துவமான லென்ஸ் கவரோடு சந்தைக்கு வந்துள்ளது.


வேரிடெஸ்க் ப்ரோ பிளஸ் 30


உங்கள் டெஸ்கை தரையில் உட்காரும்படி மாற்றியமைத்து, பின் உயரமாக நிற்கவைத்துக்கொண்டு பணியாற்றுபடியும் மாற்றினால் எப்படியிருக்கும்? அந்த வசதியைத்தான் வேரிடெஸ்க் நமக்கு வழங்குகிறது. மவுஸ், கீபோர்ட்டிற்கான பல்வேறு அளவுகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


சர்பேஸ் ப்ரோ 7


கீபோர்டை இணைத்தால் மடிக்கணினி இல்லையென்றால் டேப்லட் என உத்தேசித்து மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோவை தயாரித்துள்ளது. பல்வேறு தகவல்களை தொகுத்து எழுதவும், படங்கள் பார்க்கவும் சிறப்பாக உள்ளது. எளிதில் கொண்டு செல்லும்படி எடையும் குறைவாக உள்ளது. போதாதாழ


பவர்போர்ட் ஸ்பீட் 5 போர்ட்ஸ்


இன்று அனைவரும் டிஜிட்டல் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலரும் ஸ்விட்ச்பாக்சில் கூடுகட்ட முயலும் குளவிகளுக்கு கூட வாய்ப்பு அளிக்காமல் சார்ஜிற்கு பறக்கின்றனர். இதனால் பவர்போர்ட் போர்ட் உங்களுக்கு உதவும். இதில் ஐந்து யுஎஸ்பிபோர்ட் உள்ளது.



சிறந்த கணினி பொருட்கள் 2020


அல்ட்ரா போர்ட்டபிள்!


டெல் எக்ஸ்பிஎஸ் 13 -9310


இன்டெல் ஐரிஸ் ஸே கிராபிக்ஸ், 11வது தலைமுறை டைகர் லேக் புரோசசர், விண்டோஸ் ஓஎஸ் இந்த கணினியை மறக்கமுடியாத்தாக மாற்றுகிறது. இதனை ஆபீஸ், வீடு என எங்கும் பயன்படுத்தலாம். லேப்டாப்பில் இப்போதைக்கு அடித்துக்கொள்ள முடியாத ஹைஎண்ட் கணினி இதுவே.


டெஸ்க்டாப்பிற்கு மாற்று!


டெல் எக்பிஎஸ் 17 -9700


சிம்பிளான பெரிய திரை கொண்ட லேப்டாப். ஏறத்தாழ மேசைக்கணினிக்கு மாற்று என்று கூறும்படி அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. 4கே தரத்தில் வீடியோவும் இதில் உண்டு. இன்டெலின் கோர்9 புரோசசர் இதில் பயன்படுத்தப்படுகிறது.


பட்ஜெட் லேப்டாப்


ஆசுஸ் விவோபுக் எஸ் 15 எஸ் 5333


மலிவான விலையில் இயங்கும் குரோம் புக். 15.6 இன்ச் திரை கொண்டது. 1080 பிக்சல் கொண்ட பாதி மெட்டல் டிசைன் கொண்ட அமைப்பு ஈர்க்கிறது. கீபோர்ட், டச்போர்டு இரண்டும் அவ்வளவு தரம் என்று கூறமுடியாது. காசுக்கேற்ற பணிஆரம் என்று சொல்லலாம் அவ்வளவே.


பிஸினஸ் லேப்டாப்

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 கார்பன் ஜென்8 2020


எளிதாக தூக்கும்படியான எடை, சிறந்த கீபோர்டு, அனைநீங்

இதனை சாலை, அலுவலகம் என எங்கும் பயன்படுத்த முடியும்.



சிறந்த இபுக் ரீடர்


ஆன்க்ஸி புக் நோட் ஏர்

ஆண்ட்ராய்ட் 10 இல் இயங்கும் இபுக் ரீடர். கோப்புகளை எளிதாக திறந்து வசதிக்கேற்ற அளவில் படிக்க முடிகிறது. அவற்றில் தேவையான குறிப்புகளையும் எழுதிக்கொள்ளலாம்.


சிறந்த ஆண்ட்ராய்ட் போன்


சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா


5ஜிக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட போன், முந்தைய போன்களை விட ஸ்டைலாகவும், அனைத்து அப்டேட்டான விஷயங்களும் கொண்டுள்ளது. 5எக்ஸ் ஜூம் வசதியும் போனை அசத்தலாக்குகிறது. பேட்டரியின் திறன், திரையின் அழகு என அனைத்து விஷயங்களிலும் ஸ்கோர் செய்கிறது.


பிசி மேகசின்



கருத்துகள்