வரலாற்றை மாற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கழிவறை, காம்பஸ், வெடிமருந்து, கடிகாரம்

 

 

 

 

 

 

 Compass, Orientation, Map, Address, North, South

 

 

 

காம்பஸ்


கி.பி 200


இரும்பினால் ஆன காம்பஸை முன்னர் சீனர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் கண்டுபிடித்த தற்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் காந்த காம்பஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குப்பிறகுதான் கப்பலில் மாலுமிகள் எளிதாக வழி கண்டுபிடித்து புதிய தேசங்களுக்கு சரியாக கடல் வழி கண்டுபிடித்து செல்ல முடிந்தது. இதன்மூலம் கடலில் பல்வேறு சீதோஷ்ண நிலை மாற்றங்களுக்கு பயப்படாமல் பயணித்தனர். 16ஆவது மற்றும் 17ஆவது நூற்றாண்டில் காம்பஸ் பெரிய புரட்சியை செய்தது எனலாம்.


கடிகாரம்

Time, Clock, Watch, Hours, Minutes, Seconds, Alarm

13ஆம் நூற்றாண்டு


முள் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீர், மணல் மூலம் கடிகார நேரம் கணிக்கப்பட்டு வந்தது. 13ஆம் நூற்றாண்டில் மெல்ல எந்திர கடிகாரங்கள் உருவாக்கப்படத் தொடங்கின. அந்த காலகட்டத்தில் இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை பெரிதும் மக்கள் கவனிக்கவில்லை. ஆனால் இவை தென்பட்ட இடமாக தேவாலயங்களே இருந்தன. 14ஆவது நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்களில் கடிகாரங்கள் தென்பட்டன. பின்னர் எந்திர கடிகாரங்களின் நேர துல்லியம் மெல்ல அதிகரித்து 30 ஆண்டுகளில் சிறப்பான எல்லையைத் தொட்டன.


மூக்கு கண்ணாடி


1286


இன்று அதிக நூல்களை படிப்பவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான மக்களுக்கு கிட்டப்பார்வை தூரப்பார்வை குறைபாடு உண்டு. இந்த குறைபாட்டை சரி செய்து படிக்க மூக்கு கண்ணாடிகள் உதவுகின்றன. முழுமையாக தீர்க்க அறுவை சிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவற்றை விட மூக்கு கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம். காரணம் இதன் செலவு என்பதோடு எளிமையானதும் கூட. 13ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று லென்ஸ்கள் கண்டறியப்பட்டன. அப்போது கூட லென்ஸ்களின் திறன் பற்றி பலரும் முழுமையாக அறியவில்லை. பணக்கார கோமான்களும் சீமான்களும் மட்டுமே இதனை அணிந்துகொண்டு உலாவினர். பின்னர் பல்வேறு நிறுவனங்கள் இதனை விற்கத்தொடங்க வெகுஜன மக்களின் புழக்கத்திற்கு கண்ணாடிகள் வரத்ததொடங்கின.


காற்றாலை


800


ஒன்பதாம் நூற்றாண்டில் பெர்சியாவில் காற்றாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நீரை இழுப்பதற்கான முறையில் முதலில் காற்றாலைகளை நாணல் மற்றும் துணியால் அமைத்து பயன்படுத்தினர். சில இடங்களில் தானியங்களை அரைப்பதற்கும் இதனை பயன்படுத்தினர். தற்போதுள்ள காற்றாலையின் வடிவம் ஹாலாந்தில் உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வடிவம் உருவானது. பழைய காற்றாலைகளின் விதிகளை புதிய காற்றாடி டர்பைன்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.


காலண்டர்


கி.பி. 46


ஆண்டு இறுதியில் அண்ணாச்சி கடையில் காலண்டர்களுக்கு பலரும் அலைமோதிக்கொண்டிருப்பார்கள். கி.பி 2000 ஆண்டு முதலாக சுமேரியர்கள் மூலமாக காலண்டர்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.ம ஜூலியன் காலண்டர் உருவாக்கப்பட்டு பின்னர் சீசர் மன்னரால் மாறுதல்கள் செய்யப்பட்டு காலண்டரின் பல்வேறு மாதங்கள் மாற்றப்பட்டன. இது வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம். பின்னர் 13ஆம் போப் கிரிகோரியால் மாற்றப்பட்ட காலண்டர்கள்தான் நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம். மக்களால் எளிமையாக புரிந்துகொள்ள முடிவதும் இந்த வகைதான்.


Gun, Shoot In, Schützenfest, Artillery, Shoot, Weft

வெடிமருந்து!


800


இதனையும் சீன வேதியியல் வித்வான்கள்தான் கண்டுபிடித்தனர். மனிதர்கள் கண்டுபிடித்த மிகமோசமான கண்டுபிடிப்பு இதுதான். இதில் அப்படியென்ன உள்ளது? பொட்டாசியம் நைட்ரேட், சல்பர், நிலக்கரி ஆகியவை வெடிமருந்தில் முக்கியமான பகுதிப்பொருட்கள். இதனை மூங்கில் குழாயில் வைத்து வெடிக்க வைப்பார்கள். பின்னர் இந்த மூங்கில் குழாய் இரும்பு குழாயாக வளர்ச்சி பெற்றது. அதன் பாதிப்பும் அப்படியே அதிகரித்து வந்தது. பின்னர் இதனை பீரங்கிகளிலும் பல்வேறு ஆயுதங்களிலும் வைத்து பயன்படுத்தி எதிரிகளை கொன்று குவித்தனர்.


ராக்கெட்


904


மறுபடியும் சீனர்கள்தான் இதனையும் கண்டுபிடித்தனர். உலகம் முழுவதும் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை ஏராளமான பட்டாசு வகைகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்து வருகின்றனர். நீண்ட குச்சியுடன் வெடிமருந்து வைக்கப்பட்ட பொருள்தான் ராக்கெட். இதன் நீண்ட முனையில் தீ வைத்துவிட்டால் போதும்.. ராக்கெட் சர்ரென சீறி வானில் மேலேறி வெடிக்கும். நவீன ஆயுதங்களை தயாரிப்பதற்கான அடிப்படையை ராக்கெட் உருவாக்கியது. இன்று ஏவுகணைகளை உருவாக்கி எதிரிகளை தாக்குவதற்கான அடிப்படையும் ராக்கெட்டின் மூலம்தான் உருவானது.


தொலைநோக்கி


1609


ஜெர்மன் - டச்சு லென்ஸ் தயாரிப்பாளர் ஹான்ஸ் லிப்பர்ஷெ என்பவர்தான் இதனை முதன்முதலில் உருவாக்கினார் என்கிறார்கள். இதனை கலிலீயோ காப்பியடித்து உருவாக்கிய வடிவமைப்புதான் தொலைநோக்கியின் மேம்பட்ட வடிவம் என்று விமர்சனங்கள் உள்ளன. 1609இல் உருவான தொலைநோக்கியின் மேம்பட்ட வடிவம் இப்படித்தான் உருவானது. 20எக்ஸ் என்ற அளவில் தொலைநோக்கியின் பார்க்கும் சக்தி அதிகரித்து இருந்தது. அன்றைய தொலைநோக்கிப்படி சூரியன், வியாழன் ஆகிய கோள்களை கலிலீயோ கண்டுபிடித்திருந்தார். இன்று தொலைநோக்கியின் சக்தி பெரியளவு முன்னேறியுள்ளது.

Printing, Printing Industry, Printing Technology

அச்சு எந்திரம்

 


1450


மனிதர்கள் கண்டுபிடித்த முக்கியமான கண்டுபிடிப்பு என இதனைக் கூறலாம். இதனை 15ஆம் நூற்றாண்டில் ஜோகன்னஸ் குடன்பெர்க் கண்டுபிடித்தார். இதன்மூலம் நூல்களை குறைவான விலைக்கு எளிதில் அச்சிட்டு மக்களுக்கு வழங்க முடிந்தது. இதனால் பெரும் பணக்கார ர்கள் மட்டும் படித்து வந்த கல்வியை அனைவருக்கும் எளிதாக பரப்ப முடிந்தது. இன்றுவரையிலும் புத்தகத்தின் படிக்கும் விதம் மாறினாலும் அதனை அச்சிடும் வடிவம் நவீனமானாலும் அதன் நோக்கம் அறிவை பரப்புவதுதான்.


Water, Closet, Toilet, Wc, Lavatory, Convenience 

 

 

கழிவறை


1596


16ஆம் நூற்றாண்ட்டில் கழிவறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் இவற்றில் குழி இருந்ததே மலத்தை எப்படி அங்கிருந்து நகர்த்துவது என்பது தெரியவிலை. 1596ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜான் ஹாரிங்டன் தனது வீட்டில் கழிவை நீரின் மூலம் அகற்றும் கழிவறையை உருவாக்கி பொருத்தினார். மலத்தை நீர் அடித்து சென்று அதனை கீழேயுள்ள டேங்கில் தள்ளும். இது குடிமைச்சமூகத்தின் சுகாதாரத்தை மாற்றிய கண்டுபிடிப்பு.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்