செக்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றும் உளவு அமைப்பு ஏஜெண்ட்! தி நவம்பர் மேன்
தி நவம்பர் மேன்
ரஷ்யாவுக்கு உளவு அமைப்பிலுள்ளவர்களின் சதியால் அனுப்பப்பட்டு சிக்கிக்கொண்டு விடும் பெண்ணை மீட்க இன்னொரு ஏஜெண்ட் செல்கிறார். ஆனால் அந்த திட்டம் சொதப்ப அவரின் உயிரும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறது. அதிலிருந்து மீள அவரிடம் பயிற்சி பெற்ற இன்னொரு ஏஜெண்ட் உதவுகிறார். இதோடு ரஷ்ய அதிபராக வாய்ப்புள்ளவரின் செக்ஸ் ஊழல்களை வெளியே கொண்டு வரும் திட்டமும் அமெரிக்காவின் உளவுப்படைக்கு உள்ளது. அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதை பரபரவென வேகமாக சொல்லியிருக்கிறார்கள்.
பியர்ஸ் பிராசனனின் உணர்ச்சிகளை உள்ளடக்கிய நடிப்புதான் படத்தின் பெரும் பலம். யாருக்கும் தெரியாமல் திருமண வாழ்க்கையை மறைத்து வைத்திருப்பவரை ரஷ்யாவுக்கு உளவு அமைப்பு அனுப்பி வைக்கிறது. யாருக்காக நடாலியா என்ற அவரது மனைவியும் ஏஜெண்டுமானவரை மீட்கத்தான். ஆனால் இதை மோப்பம் பிடித்த ரஷ்ய ஆட்கள பின்தொடர அமெரிக்க உளவு ஆட்களால் நடாலியா கொல்லப்படுகிறார்.
கொதித்து எழும் பீட்டர் டெபேரோ(பியர்ஸ் பிராசனன்) தனது அமைப்பைச் சேர்ந்தவர்களின் உள்ளடி வேலைதான் இதற்கு காரணம் என நொடியில் தெரிந்துகொண்டு அவர்களை வேட்டையாடுகிறார். அவரைக் கொல்ல ஆணையிடப்படும் அவரது மாணவர் அவரைக் கொல்லமுடியாமல் விட்டுவிடுகிறார். நடாலியா இறக்கும் முன்னே ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த பெண்ணை எப்படி பீட்டர் கண்டுபிடித்து உலக ஊடகங்களின் முன்னே கொண்டு வருகிறார். அதற்கு அவர் சந்தித்த சவால்கள் என்ன என்பதை துப்பாக்கிச்சத்தங்களுக்கு இடையில் சொல்லியிருக்கிறார்கள்.
படம் உளவு அமைப்புகள் அரசு, அரசியல் என நகர்ந்தாலும் பாசம், காதல், நட்பு, துரோகம் செக்ஸ் என பல்வேறு விஷயங்கைள போகிற போக்கில் சொல்லிச்செல்கிறது.
பீட்டர் பாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத நடிப்பும், வேகமும், அவரது குண நலன்களும் பியர்ஸ் பிராசனனை மறக்கமுடியாத நடிகராக மாற்றுகிறது. அவரது மாணவனைப் பார்த்து மனிதனாக இருக்கணும்னு நினைக்கிறியா இல்லை மிருகமாக என கேட்டு அவனின் காதலியின் தொடை நரம்பை வெட்டிவிடுவது அவரது மனதிலுள்ள வலியை வெளிக்காட்டும் காட்சி.
சிறுவனின் மீது குண்டு பாயும் காட்சி, பெண்ணின் தொடையை வெட்டுவது துப்பாக்கிச் சூடு காட்சிகள் என படத்தில் நிறைய வன்முறை, செக்ஸ் காட்சிகள் உண்டு. எனவே கதைக்கான காட்சிகளை புரிந்துகொண்டு பாருங்கள். கவனம்.
துரோகத்திற்கு எதிரான போராட்டம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக