சிறந்த கதை நூல்கள் 2020! டைம் இதழில் பரிந்துரைக்கப்பட்ட நாவல், சிறுகதை நூல்களின் பட்டியல்!
சிறந்த கதை நூல்கள்
ஐ ஹோல்ட் எ வோல்ஃப் பை தி இயர்ஸ்
லாரா வான் டென் பெர்க்
அனைத்தும் பெண்களை மையமாக கொண்ட சிறுகதைகள். நிஜ வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்படும் பெண்களின் கதைகளை நகைச்சுவையும், வலியும் கலந்து படைப்புகளாக்கியுள்ளார்.
பர்னிங்
மேகா மஜூம்தார்
ஒரு முஸ்லீம் பெண் தவறுதலாக தீவிரவாதி என குற்றம் சாட்டப்படுகிறாள். அவளுக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் உருவாக்கப்படுகிற நிலையில் எப்படி அவளின் வாழ்க்கை பயணிக்கிறது என்பதை இந்தியாவின் அரசியல் நிலையை அப்படியே கண்ணாடி போல காட்டும் படைப்பு இது.
வேர் த வைல்ட் லேடீஸ் ஆர்
அயோகா மட்சுதா
ஜப்பானிய பேய்கதைகளை பெண்ணிய பார்வையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இங்கு பேசப்படும் சூழல்கள் அனைத்தும் தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்திப்பதுதான்.
பிரெஸ்ட் அண்ட் எக்ஸ்
மீகோ காவகாமி
ஜப்பானிய நாட்டில் வாழும் அக்கா, தங்கை, அவர்களுடைய உறவுப்பெண் ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பு.
ஹோம்லேண்ட் எலிஜீஸ்
அயத் அக்தர்
அக்தர், தனது பாகிஸ்தானிய பரம்பரை வழி அவரது பெயர், அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து அமெரிக்கர் என்ற அடையாளத்தை அடைந்தது பற்றி பேசுகிறார் எழுத்தாளர்.
நன்றி
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக