பாஜகவின் பிளவுவாத அரசியலையும் மாண்டுவிட்ட சட்டம் ஒழுங்கையும் காங்கிரஸ் மீட்கும்! ஜிதின் பிர்சாதா, மேற்கு வங்கம்

 

 

 

 

Time has come for upper castes, some dominant castes have ...

 

 

 

 

ஜிதின் பிர்சாதா


காங்கிரஸ் பொறுப்பாளர் , மேற்கு வங்கம்


இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை அறிவிப்பதில் தாமதம் எதற்கு?


காங்கிரஸ் இந்த முடிவில் தெளிவாக உள்ளது. நாங்கள் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இறுதிமுடிவை கட்சித்தலைவரான சோனியா எடுப்பார். நாங்கள் இப்போது கட்சியில் பல்வேற கட்டரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.


நீங்கள் இப்போது எதிர்ப்பது திரிணாமூல் காங்கிரஸ் அல்லது பாஜகவையா?


இப்போது காங்கிரஸ் இரண்டு வித போட்டிகளை சமாளிக்கவேண்டியுள்ளது. ஒன்று மக்களை இனரீதியாக பிரிக்கும் பாஜக, அடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உள்நாட்டில் ஏற்படுத்தும் திரிணாமூல் காங்கிரஸ். பாஜக அரசு வளர்ச்சி திட்டங்கள் பற்றி கவலைப்படாமல் பிரவினை அரசியலை நாட்டில் விரிவுபடுத்தி வருகிறது. இதனால் சுகாதாரம், கல்வி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இன்றி உள்ளன.



இப்போது தேர்தல் பிரசாரத்தில் கூட குடியுரிமைச்சட்டம், தேசிய குடியுரிமை பதிவேறு பற்றி விவகாரங்கள் பேசப்படுகின்றன. இதில் காங்கிரசின் நிலை என்ன?


காங்கிரஸ் நாட்டின் நலனுக்காக எதையும் செய்யும். பாஜக தேர்தலின் போதுதான் குடியுரிமை சட்டம் பற்றி விவகாரத்தை கருவியாக எடுத்து பயன்படுத்தும். பின்னர் அதனை தூக்கி எறிந்துவிடும். மக்கள் இதனை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


காங்கிரஸ் பாஜக மேற்கு வங்கத்தில் அதிக இடங்களை குறிவைக்கும் நிலையில் அவர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?



2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக நிறைய இடங்களில் விரிவடைந்துவிட்டது. ஆனால் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு மக்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை உருவாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் கூறிய வாக்குறுதிகள் பொய்யாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் கூட சரியான அரசியலை செய்யவில்லை. உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை பிரிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறார்கள்.

தி  இந்து ஆங்கிலம்


கருத்துகள்