இடுகைகள்

china லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்கா, சீனா வர்த்தகப்போரில் மாட்டிக்கொண்ட ஹூவாய்!

படம்
  ஹவுஸ் ஆப் ஹூவாய் ஈவா டு பெங்குவின் 2025 சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை அறிந்திருக்கிறீர்களா? வதந்தி நாளிதழைபடிப்பவர்கள் கூட தடை செய்யப்பட்ட சீன நிறுவனம் என தகவல் அறிந்திருப்பார்கள்.அதை அறியாதவர்கள் கூட ஹூவாயின் பிராண்டான ஹானர் போனை பயன்படுத்தியிருக்க கூடும். சீனா மட்டுமல்ல வல்லரசு நாடுகளிலும் சிறப்பாக வளர்ந்து வந்த நிறுவனம் ட்ரம்ப் காலத்தில் வழக்கு போடப்பட்டு அதன் வளர்ச்சி பலவந்தமாக தடுக்கப்பட்டது. ஒரு நாடு மட்டுமல்ல, அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் ஹூவாயின் தொலைத்தொடர்பு சேவையை, பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தின. இந்த நூல், ஹூவாய் நிறுவனர் ரென்னின் முதல் மனைவி மகளான ரென் வாங்சூ கனடாவில் காவல்துறையால் கைது செய்யப்படுவதில் தொடங்கி அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னே என்ன நடந்தது, பின்னே என்ன நடந்தது என விளக்கி ஹூவாய் எப்படி எதிர்ப்பை சந்தித்து தன்னை காப்பாற்றிக்கொண்டது என்பதோடு நிறைவடைகிறது. நூல் முழுக்க ஹூவாய் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள், அதை செய்ய அந்த நிறுவனம் செய்த முயற்சி, திட்டமிடல் ஆகியவை நிறைந்திருக்கிறது. அதேசமயம். சீன நிறுவனம் என்ற ஒரே காரணத்திற்காக இரு நாடுகளுக்கு ...

ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள்!

படம்
      ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள் சீனா, சோசலிச கருத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகார நாடு. அதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா, இப்போதைக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் என்பது பெயரளவுக்கேனும் உள்ளது. சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னைகள் சுதந்திரமடைந்த காலம் தொட்டே உண்டு. இப்போது சீனா, திபெத்தை முழுக்க கையகப்படுத்தி, அங்கு அவர்களின் அரசியல் கருத்துக்கு ஏற்ற தலாய் லாமா ஒருவரை நியமித்து ஆட்சி செய்து வருகிறது. திபெத்திற்கு பார்வையாளர்கள் வரவோ, அங்குள்ளவர்கள் இந்தியாவில் உள்ள ஆன்மிக தலைவரான அசல் தலாய் லாமாவைப் பார்க்கவோ செல்ல முடியாது. அதற்கு சீன அரசு அனுமதி அளிப்பதில்லை. சீனாவில் சோசலிச அரசுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாது. டெக் நிறுவனங்கள் மூலம் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அரசை விமர்சிக்கும் பதிவுகள் உடனே காவல்துறையால் நீக்கப்பட்டு வருகின்றன. நடப்பு காலமான 2024ஆம் ஆண்டு, திபெத்தில் மக்கள் சீன குடியரசு உருவாகி எழுபத்தைந்து ஆண்டு ஆனதையொட்டி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. உண்மையி...