இடுகைகள்

நேர்காணல் - ராமச்சந்திர குஹா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தி, சரளாதேவி உறவு இயல்பான ஒன்று!

படம்
ராமச்சந்திர குஹா.....4  1928 ஆம் ஆண்டு காந்தி தன் மகன் தேவதாஸ், ராஜாஜியின் மகள் லட்சுமியை திருமணம் செய்யும் முயற்சிக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்?  சாதி மறுப்பு திருமணம் என்பதே காரணமா? அம்மறுப்புக்கு தார்மிக ரீதியான பல்வேறு காரணங்கள் இருந்தன. முதல் காரணம்,  தீண்டாமை குறித்த காந்தியின் கருத்துகள் சாதி இந்துக்களை கடுமையான சீண்டியிருந்தது. மேலும் காந்தி இளைஞர்களை பலரை பிரம்மச்சரியம் காக்கும்படி பிரசாரம் செய்திருந்ததும் அவரை உறுத்தியிருக்கலாம். அப்போது அவரின் மூத்த மகன் மணிலால் முஸ்லீம் பெண்ணை மணக்க விரும்பினார். அதுவும் காந்தியின் கொள்கைக்கு விரோதமான பிரச்னையாக மாறியிருந்தது. இந்துக்கள் தம் பெண்களை கவரவே தம் மதத்திற்கு மாறுகிறார்கள் என முஸ்லீம்கள் கூறிவிடுவார்கள் என்ற அச்சம் காந்திக்கு ஏற்பட்டதால் முடிவெடுக்க தயங்கினார்.  இன்று தலைகீழாக நிலைமை மாறி  காந்தி பயப்பட்ட வாசகத்தை வலதுசாரி இந்துத்துவவாதிகள் கூறிவருகின்றனர். காந்தி தன் காலத்தில் சிந்தித்து எழுதியதை விட டாக்டர் அம்பேத்கர் தொலைநோக்காக நிறைய செயல்பாடுகளை செய்துள்ளார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? சந்தேகத்

காந்தியை இன்றைய காலகட்டத்தின் பார்வையில் மதிப்பிடாதீர்கள்!

படம்
ராமச்சந்திர குஹா பேட்டி .. இரண்டாம் பகுதி காந்தியைப் பற்றி இரண்டு நூல்கள் எழுதுவதற்கு என்ன காரணம்? எனக்கு சிறுவயதில் புனித நூலை வலுக்கட்டாயமாக உடலில் அணிவித்தனர். அப்போது காந்தி ஏன் புனித நூலை வெறுத்தார் என்பதை யோசித்தேன். பின்னாளில் பல்வேறு காந்திய மனிதர்கள் மூலம் காந்தியை அறிந்து வியந்த காரணமே நூல் எழுதவும் உந்தியது.  நவீன காலத்தில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட காந்தியை ஏறக்குறைய அனைவரும் தரக்குறைவாக பேசி அவரின் பங்களிப்பை மறைக்கத் தொடங்கியுள்ளனர். காந்திக்கு எதிரான கலக மனநிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  காந்தியை அம்பேத்கருடனோ அல்லது பிற தலைவர்களுடனோ ஒப்பிடக்கூடாது. காந்தி, சுதந்திர போராட்ட வீரர் என்ற நிலையை கடந்த ஆளுமை. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம், இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது உண்மை. அதேசமயம் ஆங்கிலேயர்களின் படைபலத்தை அகிம்சை மூலம் எதிர்த்த காந்தி பல பரிமாணங்களை கொண்டவர். அவரை வெவ்வேறு கோணங்களில் எவரும் பார்க்க முடியும் என்பதுதான் அவரது பலமும் ஏன் பலவீனமும் கூட.  காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது ஜாதி அமைப்பு சமூக