இடுகைகள்

பஞ்சாயத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுவாழ்வில் பெண்களை பங்கெடுக்க கற்றுத்தரும் முன்னோடிப் பெண்கள்!

படம்
  ஏஞ்சலிகா அரிபம், அரசியல் செயல்பாட்டாளர் உ.பி. தேர்தலில் பாஜக கட்சி வெல்வதற்கு பெண்கள் தான் முக்கியமான காரணம் என தலைமை மக்கள் சேவகர் திரு. மோடி கூறினார். இப்படி ஆண்கள் சொன்னாலும் உண்மையில் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பை அதிகளவில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் அதற்காகவெல்லாம் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இதற்கென தனி அமைப்பை தொடங்கி பெண்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதைப்பற்றியதுதான் இக்கட்டுரை.  ஏஞ்செலிகா அரிபம், தேசிய கட்சி ஒன்றில் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளார். ஆனால் கட்சி அவருக்கு இடம் தராமல் மனதில் மட்டும் இடம் தந்துள்ளது. அதற்காக முதலில் வருத்தப்பட்டாலும், இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது என முடிவெடுத்து, பெண்களை அரசியலுக்கு பயிற்றுவிக்கும் ஃபெம்மே ஃபர்ஸ்ட் Femme first என்ற அமைப்பைத் தொடங்கினார். இத்தனைக்கும் அரிபம் பலருக்கும் அறிமுகமாக பெண் என்று கூட யாரும் சொல்லமுடியாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி இடம் மறுத்தபோதுதான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.  கங

பெண்களை தலைவராக கொண்டுள்ள நாடுகள் சிறப்பான வளர்ச்சியையும் பாதுகாப்பையும் பெற்றுள்ளன! - அனிதா பாட்டியா

படம்
                நேர்காணல் அனிதா பாட்டியா ஐ . நா அமைப்பின் துணைத்தலைவர் பெண்கள் தலைமைப் பொறுப்பு வகிப்பதற்கும் , அரசு பதவிகளில் அமர்வதற்கும் தடையாக உள்ள விஷயங்கள் என்ன ? நாங்கள் இதுபற்றி செய்த ஆய்வில் 80 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் ( பெண்கள் ), உளவியல் ரீதியான தாக்குதல்களை சந்தித்தே அந்த இடங்களை அடைந்திருந்தது தெரிய வந்தது மேலும் அலுவலக ரீதியாக முக்கியமான இடங்களுக்கு முன்னேற பல்வேறு உடல்ரீதியான உள்ள ரீதியான வன்முறைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது . நேரடியாக சொல்வது என்றால் , பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை பல்வேறு நாட்டு அரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை . பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தேர்தல் முறை அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்குமா ? இந்த முறையில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மைதான் . ஆண் வேட்பாளர்களின் அதே எண்ணிக்கையில் பெண்களுக்கும் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும் . மேலும் , அவர்கள் அங்கு வெற்றி பெறும் வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டால் பெண்களை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் . எனவே , பெண்கள் பற்றி முன்முடிவுகளை எடுக்காமல் அவர்களுக்க

ஊரக உள்ளாட்சிகளுக்கு மரியாதை! - சாதனைகளுக்கு விருது!

படம்
உள்ளாட்சிக்கு மரியாதை! மக்களாட்சியின் மணிமகுடமாக திகழ்பவை ஊராட்சி அமைப்புகள். இவையே கிராமங்களை சுதந்திரமாக செயல்பட வைக்க உதவுகின்றன. கிராம சபைகள் கூடி எடுக்கும் தீர்மானத்தை நீதிமன்ற உத்தரவுகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அந்தளவு ஆற்றல் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகளுக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை, உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை கவனிக்கிறது. 2011-12 ஆம் ஆண்டு முதலாக இத்துறை மிகச்சிறந்த செயற்பாடுகளைக் கொண்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்குவிக்கிறது. அதில் முக்கியமான விருதுகளைப் பார்ப்போம்.  சிறந்த முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு, தீன்தயாள் உபாத்யாய பஞ்சாயத் சகாத்கிகாரன் புரஸ்கார் விருது ( Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (DDUPSP)) வழங்கப்படுகிறது. இந்த விருது கிராமம், நகரம், பெருநகரம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. சாலை, குடிநீர், சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, பட்டியலினத்தோர்