ஊரக உள்ளாட்சிகளுக்கு மரியாதை! - சாதனைகளுக்கு விருது!




Image result for panchayat raj





உள்ளாட்சிக்கு மரியாதை!

மக்களாட்சியின் மணிமகுடமாக திகழ்பவை ஊராட்சி அமைப்புகள். இவையே கிராமங்களை சுதந்திரமாக செயல்பட வைக்க உதவுகின்றன. கிராம சபைகள் கூடி எடுக்கும் தீர்மானத்தை நீதிமன்ற உத்தரவுகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அந்தளவு ஆற்றல் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகளுக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை அளித்து கௌரவம் சேர்க்கிறது.

இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை, உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை கவனிக்கிறது. 2011-12 ஆம் ஆண்டு முதலாக இத்துறை மிகச்சிறந்த செயற்பாடுகளைக் கொண்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்குவிக்கிறது. அதில் முக்கியமான விருதுகளைப் பார்ப்போம். 

சிறந்த முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு, தீன்தயாள் உபாத்யாய பஞ்சாயத் சகாத்கிகாரன் புரஸ்கார் விருது ( Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (DDUPSP)) வழங்கப்படுகிறது. இந்த விருது கிராமம், நகரம், பெருநகரம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. சாலை, குடிநீர், சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, பட்டியலினத்தோர் மேம்பாடு, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், இணையவழி நிர்வாகம் ஆகிய திறன்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறப்பாக செயற்படும் ஊரக கிராம சபைகளை அங்கீகரித்து கௌரவிக்க, நானாஜி தேஷ்முக் ராஷ்டிரியா கௌரவ் கிராம்சபா புரஸ்கார் விருது (Nanaji Deshmukh Rashtriya Gaurav Gram Sabha Puraskar (NDRGGSP) வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தலா ஒரு விருது பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு கிராமங்களின் சமூக பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு விருது, சிறந்த மூன்று கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு அமலான விருது இது.


நன்றி - இந்திய அரசின் பஞ்சாயத்துராஜ் வலைத்தளம்