எதிர்கால நம்பிக்கை மனிதர்கள் 2019 - 2020





Image result for bapi das
பபி தாஸ், எம்ப்ராய்டரி கலைஞர்


காலம் எல்லோருக்கும் ஒரேவித வாய்ப்புகளைத்தான் வழங்குகிறது. நாம் அதில் டிவி பார்க்கிறோமோ, அல்லது டிவியில் நம்மை பிறர் பார்க்கும்படி வேலை பார்க்கிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது. யாராக இருந்தாலும் துறை சார்ந்தவர்கள் தங்கள் துறையில் இவர் ஊக்கமூட்டும்படி வளர்கிறார் என்று நம்புவார்கள். அதனை பிறருக்கும் கூறுவார்கள். அப்படி சிலர் சிலரை சிறப்பாக வருவார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களைப் பார்ப்போம்.


அமர் கௌசிக், - 36 சினிமா இயக்குநர்


அமர் கௌசிக்கின் பாலா, ஸ்த்ரீ படங்களைப் பார்த்து வியந்தேன். அதில் நிறைய மேம்படுத்தல்களை என்னால பார்க்க முடிந்தது. குறிப்பிட்ட பட்ஜெட்டில் கதையும் நிறைவாக நட்சத்திரங்களையும் வைத்து படம் செய்வது கடினம். இதனை அமர் கௌசிக் எளிதாக செய்கிறார். இவரின் கதை சொல்லும் முறையும் ரசிக்கும்படி இருக்கிறது.

- சுஜய் கோஷ் - திரைப்பட இயக்குநர்



சாரா அலிகான் 24, விக்கி கௌசல் 31 திரைப்பட நடிகை, நடிகர்

இந்த இரு நடிகர் நடிகையும் நட்சத்திரங்களாகும் அந்தஸ்து பெற்றவர்கள். கதையின் தேர்வு, அதை வைத்து மக்களை ஈர்ப்பது என்று தொடங்கி இவர்களின் மேடை அறிமுகமே அசத்தலாக இருக்கிறது. இதேபோல இவர்கள் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் பிரமாதமாக ஸ்டீரியோடைப் ஆட்களை தகர்த்து மேலே வருவார்கள்.

-அனுபமா சோப்ரா, சினிமா விமர்சகர்.

ஷாமிக் கோஷ், வங்கமொழி எழுத்தாளர். 


கோஷ், 2017ஆம் ஆண்டு சாகித்திய அகாதமியின் யுவ புரஷ்கார் விருதுபெற்றவர். இவரின் சிறுகதை தொகுப்பான எல்விஸ் ஓ அமோலசுந்தரி இதற்கு தேர்வாகி வென்றது. இவரின் ஹாஃப் டைமர் பவர் என கதை ஹார்வில் செக்கர் இளம் மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றது. நகர வாழ்க்கை மனிதர்களை புதிய மொழியில் அறிமுகப்படுத்துவது, கதையில் மாயத்தன்மையை ஏற்படுத்துவது என ரகளையான எழுத்தாளர். அடுத்த சில ஆண்டுகளில் மிகச்சிறந்த படைப்புகளை வங்கமொழிக்கு வழங்குவார் என்று நினைக்கிறேன்.

-அருணவா சின்கா, மொழிபெயர்ப்பாளர்.

பபி தாஸ் 40, கலைஞர்

பபி, கோல்கட்டாவில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் ஓவியம் பற்றி தானே கற்று தன்னை நிரூபித்தவர். பெண்களின் வேலை என்று சொல்லும் எம்ப்ராய்டரியைக் கற்று அதில் தன் கருத்துக்களை சொல்லுகிறார். இவர் கடந்த ஆண்டு கொச்சியில் வைத்த கலைப்படைப்புகளை ரென்னி அருங்காட்சியகம் முழுமையாக வாங்கிக்கொண்டு விட்டது. இந்தியாவில் இவருக்கு பெரியளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தன் உழைப்பால் பின்னாளில் அதையும் பெறுவார் பபி தாஸ்.

-அனிதா துபே, கலை செயற்பாட்டாளர்.


நௌஷாத் அலி 33, சூழலுக்கு உகந்த ஆடை வடிவமைப்பாளர்

நௌஷாத்தின் சூழலுக்கு உகந்த ஆடைகள் என்ற ஐடியா, பாராட்டத் தக்கது. இவரின் உடைகள் மக்களுக்கானவைதான். பிரபலங்களுக்கானவை அல்ல. இதனால்தான் அவர் என்னை ஈர்க்கிறார். பாண்டிச்சேரியின் ஆரோவில்லில் நௌஷாத் பணியாற்றி இருக்கிறார்.


-கௌதம் வாஸிரானி , ஃபேஷன் நிறுவன தலைவர்


ஜெமிமா ரோட்ரிகுயிஸ், 19, கிரிக்கெட் வீரர்

தன் பதினேழு வயதில் இரண்டு இரட்டை சதங்களை அடித்து வியக்க வைத்திருக்கிறார் ஜெமிமா. மார்ச் 2018 இல் இந்திய அணிக்காக விளையாடியவர் கடந்த நவம்பரில்  ஐசிசி இளம் பெண் வீரர்கள் பட்டியலில் 50 வீரர்களில் ஒருவராக இடம்பெற்று சாதனை படைத்தார். இது ஐசிசி வெளியிட்ட பட்டியல் ஆகும். இங்கிலாந்தில் நடைபெற்ற கியா சூப்பர் லீக் தொடரில் வேகமான சதம் அடித்து சாதனை செய்தார்.

நன்றி - டைம்ஸ் டிச.29, 2019