கலகக்கார கோமாளி - ஜோக்கரின் முன்கதை




Image result for joker



ஜோக்கர்

இயக்கம் டாட் பிலிப்ஸ்

ஒளிப்பதிவு லாரன்ஸ் செர்

இசை ஹில்டர்



1981ஆம் ஆண்டு நடைபெறும் கதை. இதில் ஜோக்கர் எப்படி உருவானார் என்பதை விவரிக்கிறது.

அடக்கமுடியாமல் சிரிக்கும் குறைபாட்டால் அவதிப்படும் ஆர்தர் பிளேக்கிற்கு, இக்குறைபாட்டால் தனிக்குரல் நகைச்சுவையாளராக வாய்ப்பும் பறிபோகிறது. ஒரு நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு பேசுகிறார். ஆனால் அதனை நாடு முழுவதும் கிண்டல் செய்து பேசுகிறார் டிவி தொகுப்பாளரான ராபர்ட் நீரோ. முதலில் இதற்காக மகிழும் பீனிக்ஸ், பின்னர் அது தன்னை கிண்டல் செய்வதற்கான முயற்சி என கோபமாகிறார். அவர் அதற்கு பதிலாக என்ன செய்தார். என்பதை ஜோக்கர் படம் சொல்லுகிறது.

Image result for joker


படத்தின் நிறம், இசை என ஜோக்கரின் இருண்ட மனநிலையை சொல்வது போலவே உள்ளது. அனாதையாக பிறந்தவரை எடுத்து வளர்க்கும் அவரது தாய்க்கும் மனநிலை பிறழ்வு பிரச்னை அவரின் வாழ்வை பரிகசிக்கிறது. கோதம் நகரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைகளை நகர நிர்வாகம் தடாலடியாக நிறுத்துகிறது.

இதனால் ஏற்கெனவே சிதைந்த மனம் கொண்ட பீனிக்ஸின் சிரிப்பை நிறுத்தமுடியாமல் போகிறது. அவரின் கற்பனை உலகிலும் அவரால் வாழ முடியாமல் போகிறது. மூன்று நபர்களால் ரயிலில் கேலிக்கு உள்ளாகும் பெண்ணைக் காப்பாற்ற போக,  அதன் விளைவாகவே ஆர்தர் பிளாக்கினுள் ஜோக்கர் என்ற கதாபாத்திரம் உருவாகிறது.

டிவி நிகழ்ச்சியில் அவர் பேசும் வசனங்கள் பணக்காரன் - ஏழை வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டும்.

Image result for joker

இயக்குநர் டாட் பிலிப்ஸ், கதாசிரியர் ஸ்காட் சில்வர் டாக்சி ட்ரைவர், கிங் ஆஃப் காமெடி ஆகிய படங்களைப் பார்த்து சூழ்நிலைகளை உள்வாங்கி படத்தை எடுத்திருக்கின்றனர். இதனால் படத்திற்கு தங்க சிங்க விருது கிடைத்திருக்கிறது. கூடவே டிசி காமிக்ஸ் ரசிகர்களின் கரகோஷமும் கூட.

ஹீத் லெட்ஜர் ஜோக்கரை ஒருவிதமாக நடித்தார் என்றால் ஜாக்குயின் பீனிக்ஸ் வேறுவிதமாக அதனை மாற்றிக்காட்டியுள்ளார்.

டிசி காமிக்சுக்கு மட்டுமல்ல. அதன் ரசிகர்களுக்கும் முக்கியமான படம் கூடத்தான்.

கோமாளிமேடை டீம்








பிரபலமான இடுகைகள்