ஆவியாக வந்து மகனுக்கு தாம்பத்திய பாடம் எடுக்கும் அப்பா- சோகடே சின்னி நயனா





Image result for chogada chinni nayana





சோகடே சின்னி நயனா - தெலுங்கு

இயக்கம் கல்யாண் கிருஷ்ணா குருசலா

கதை - திரைக்கதை பி. ராம் மோகன்

ஒளிப்பதிவு பிஎஸ் வினோத்

இசை  அனுப் ரூபன்ஸ்

ஃபேன்டசியான கதை. கல்யாணமாகி சில ஆண்டுகளிலேயே  பங்காரு ராஜூ விபத்தில் இறந்து விடுகிறார். எப்போதும் பெண்களையே சுற்றி வந்துகொண்டிருப்பவர் அவர். அவருடைய மகனுக்கு முக்கியமான பிரச்னை வருகிறது. அதைத் தீர்க்க வருகிறார். அதோடு அவர் இறந்துபோனதற்கான காரணமும் தெரியவருகிறது. மேலும் அவரது குடும்பம் முழுக்க பலியாகும் வாய்ப்பும் உருவாகிறது. அதை எப்படி தடுக்கிறார், குடும்பத்தைக் காக்கிறார் என்பதே கதை.

Related image

ஆஹா..

படம் முழுக்க நாகார்ஜூனாதான் தெரிகிறார். படத்தலைப்பை இளமையான வசீகரன் என்பதுதான். அதனை படம் முழுக்க நிரூபிக்கிறார். அப்பாதான் இதில் பவர். மகன் இதயநோய் வல்லுநர் என்பதோடு  மற்ற விஷயங்களிலும் டியூப்லைட். அத்தனையையும் நேர் செய்துவிட்டு குடும்ப பகையையும சிவபெருமானின் அருளைப் பெற்று தீர்த்து வைக்கிறார். பிரம்மானந்தத்தின் காமெடியும் சிறப்பாக வேலை செய்திருக்கிறது.

ரம்யாகிருஷ்ணன், லாவண்யா திரிபாதி, அத்தை பெண்கள் என அத்தனைபேரும் கொள்ளை அழகு. நடிக்கவும் செய்கிறார்கள். அனுப் ரூபனின் இசையில் பாடல்களை சுகமாக ஹம்மிங் செய்யலாம்.


ஐயையோ

அப்படிச்சொல்ல பெரிதாக ஏதுமில்லை. குடும்பக்கதையில் கொஞ்சம் திரில்லர் கலந்து ஆன்மிக இலையில் பரிமாறி இருக்கிறார்கள். கடைசி கட்டம் கொஞ்சம் என்னவோடா என்று செல்கிறது. மற்றபடி படத்தை ரசித்தபடி பார்க்கலாம். படத்தை பிளே மட்டும் செய்யுங்கள் மற்றதை நாகார்ஜூனா காரு பார்த்துக்கொள்வார்.

கோமாளிமேடை டீம்