மதுவால் ஏற்படும் ஹேங்ஓவர் பிரச்னை - சமாளிப்பது எப்படி?





drunk the rock GIF by ALL SEEING EYES
giphy




ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். அதனால், பார்ட்டி பண்ணலாம் வா என்றால் கோரிக்கையையும் மறுக்கமுடியாது. பேசியபடி குடிப்பதிலும் அளவு அதிகரிக்கிறது. இதனால் அடுத்தநாள் என்னாச்சு என தலையைப் பிடித்தபடி பலரும் எழுகிறார்கள். உண்மையில் மது அருந்துவதால் உடலுக்கு என்னாகிறது?


மது அருந்துவது உடலில் கடுமையான நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் மது குடித்தவர்களுக்கு, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. கல்லீரலை மட்டும் மது பாதிப்பதில்லை. குடலையும் பாதிக்கிறது. மது அருந்துபவர்களுக்கு, அதன் மூலம் வயிற்றில் அசிட்டால் டிஹைடு என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே ஹேங்ஓவரின் வாந்தி, குமட்டல், சோர்வு ஆகியவற்றின் காரணி.

சிலர் சிவப்பு வைன், பார்பன் பருகுவார்கள். அவர்களது நம்பிக்கை, அதில் வாந்தி போன்ற பிரச்னைகள் அடுத்த நாள் ஏற்படாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் உண்மையில் ஜின், வோட்காவை விட மோசமான பிரச்னைகளை மேற்சொன்ன பானங்களே ஏற்படுத்துகின்றன.

இதிலும் சிலருக்கு மட்டும் அதிக போதை பாதிப்பு ஏற்படுகிறது. ஆராய்ச்சியில் அவை மரபணு மற்றும்  குடிப்பவரின் வயது, எடை சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

நன்றி - பிபிசி



பிரபலமான இடுகைகள்