ஓர் ஆணை இருபெண்கள், ஓர் ஆண் காதலித்தால் - நர்த்தனசாலா படம் எப்படி?
நர்த்தனசாலா -2018
இயக்கம் ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு விஜய் சி குமார்
இசை மகதி ஸ்வரா சாகர்
ஒரு ஆணை இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் விரும்பினால் என்ன நடக்கும்? அதுதான் நர்த்தனசாலா படம் சொல்லுகிறது.
ஆஹா
பெண்கள் மீதான கிண்டல், கேலிக்கு அவர்களே பதிலடி கொடுக்கும் காட்சி அருமை. காஷ்மீராவின் அழகு, யாமினியின் தைரியம் என இரண்டு நாயகிகளும் சிறப்பாக இருக்கிறார்கள். ஜெயபிரகாஷ் ரெட்டி, நாக சௌரியாவின் தந்தையான சிவாஜி ராஜா ஆகியோர் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.
சாகரின் அற்புதமான பாடல்கள் படத்தை பொறுமையாக பார்க்கச் செய்கின்றன.
ஐய்யையோ
ஓரினச்சேர்க்கை பற்றி இத்தனை கிண்டல்கள் அவசியமா? அதற்கு கிளைமேக்ஸில் நாக சௌரியா கொடுக்கும் ஒற்றை வரி சமாளித்தல் எப்படி உதவும் இயக்குநர் சார்?
இரு நாயகிகளுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பை இயக்குநர் இறுதிவரை தரவே இல்லை. ஷோகேஸ் பொம்மை போல பயன்படுத்தி இருக்கிறார்கள்.
யாமினி பாஸ்கர் தைரியமாக இருக்கிறார். அதுசரி, அதற்காக அவரை புகழ்ந்த ஒரு ஆணை இன்ஸ்டன்டாக லவ் செய்து திருமணம் வரை போகும் காட்சிகள் சரியாக இல்லை. அவரை வீட்டில் சந்திக்கும்போது, மானசாவுடனான காதலை நாக சௌரியா சொல்லியிருந்தால் வேலை முடிந்தது. அதோடு படமும் முடிவுக்கு வந்துவிடும். எனவே லாஜிக்கை மறந்துவிட்டு இழுத்து விட்டிருக்கிறார்.
காமெடிக்காக மட்டும் பார்க்கலாம். கருத்துக்காக அல்ல.
கோமாளிமேடை டீம்