வீடுகளை எரித்த கான்சாஸ் கொடூரன் - லயன்காமிக்ஸ் என்பிஎஸ் ஸ்பெஷல்!





Image result for கான்சாஸ் கொடூரன்
பிளேடுபீடியா


கேப்டன் டைகரின்

கான்சாஸ் கொடூரன்

லயன் காமிக்ஸ் - என்பிஎஸ்

விலை 400


பதினெட்டாம் நூற்றாண்டுக்கதை. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அப்போது, அரசுப்படையைச் சேர்ந்த கொடூரன் லேன் தலைமையேற்று புரட்சிப்படையை ஒடுக்குகிறார். அதேசமயம் இவருக்கு வில்லனாக பில் குவான்ட்ரில் என்ற மற்றொரு மூர்க்கன் உருவாகிறான். இவர்களை எப்படி கேப்டன் டைகர் சமாளித்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை.

ஊரை இம்முறை டைகரால் காப்பாற்ற முடியவில்லை. காரணம் உயிர் தப்பியதே தம்புரான் புண்ணியம் என்ற நிலை. இந்தக் கதையில் டைகருக்கு எந்த ஆக்சனும் இல்லை. பெரும்பாலான நேரங்கள் கைதியாகவே இருக்கிறார். இதனால் கதையில் சுவாரசியம் கெடவில்லை என்பதுதான் முக்கியம்.

டைகர் லேனை காப்பாற்றினாலும் அவன் தன் நயவஞ்சக புத்தியை கைவிடவில்லை. இறுதியில் டைகரை உயிரோடு எரிக்க பில் குவான்ட்ரில் பிளான் செய்கிறான். அதிலிருந்து டைகர் தப்பினாரா, லேன் அவருக்கு உதவினாரா என்பதுதான் கிளைமேக்ஸ்.

கதை நடக்கும் இடம் முழுக்க பரபரப்பு உள்ளது. ஆனால் டைகர் எந்த செயல்பாட்டையும் செய்யாமலேயே இதெல்லாம் நடப்பது எழுத்தாளரின் திறமைக்குச் சான்று. கதை முழுக்க பில் குவான்ட்ரிலுக்கானதாகவே உள்ளது. நாயகனும் அவர்தான் வில்லனும் அவர்தான்.


வித்தியாசமான அட்வென்ச்சர் காமிக்ஸ் இது.


கோமாளிமேடை டீம்