பிணத்துடன் திருப்தியான தூக்கம் - டென்னிஸ் நீல்சன் விளையாட்டு
அசுரகுலம் - இன்டர்நேஷனல்
டென்னிஸ் நீல்சன்
1945ஆம்ஆண்டு நவ.23 அன்று, ஸ்காட்லாந்தில் ஃபிராசர்பர்க்கில் பிறந்த சீரியல் கொலைகாரர். 1970 முதல் 80 வரை தீவிரமாக செயல்பட்டு நிறைய பேரை வைகுண்ட பிராப்தி அடைய வைத்தார். ஓரினச்சேர்க்கை மீது ஆர்வம் கொண்டவர்.
1978ஆம் ஆண்டில் முதல் ஆளை போட்டுத்தள்ளி எலுமிச்சம்பழத்தை வண்டிச்சக்கரத்தில் நசுக்கி கணக்கைத் தொடங்கினார். அதன்பின்னர் போலீஸ் கணக்கெடுத்தபோது, பன்னிரண்டு பேர்களை விசா வழங்காமல் மேலே அனுப்பி இருந்தார். பெரும்பாலான சீரியல் கொலைகார ர்களின் வாழ்க்கையில் என்ன நடந்ததோ, அதுதான் இவருக்கும் நடந்தது. குடும்ப வாழ்க்கை பெரியளவு இவருக்கு உதவ வில்லை. அம்மா, தனியாக பிரிந்து வாழ்ந்தார். அப்போது அவருடன் தங்கி பாட்டியுடன் வாழ்ந்தார். பின் அம்மா மற்றொரு திருமணம் செய்தபோது, நீல்சன் தனிமரமானார். அவரின் தாத்தா இறந்தபோது நீல்சனின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அவரின் இறந்த உடல் அவரின் மனநிலையில் உறுத்தலாக இருந்தது.
பின்னர், படிப்பு முடிந்த தும், ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு போரிடவெல்லாம் செல்லவில்லை. சமையல்கார ராக இருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறியபோது ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தன. பின் போலீசில் இணைந்தார். அவருக்கு மார்ச்சுவரிக்கு செல்வது என்றால் மிகவும் பிடிக்கும். அங்கு பிணக்கூராய்வு செய்த உடல்களை வெகுநேரம் வேடிக்கை பார்ப்பார். 1973 - 1975 இல் நீல்சனின் தனிமை அவரின் குணநலனின் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதிலிருந்து தப்ப மதுவை நாடினார். இதனால் பிரச்னை ஆழமாக மாறியது. ஓரினச்சேர்க்கை குணங்கள் தலைகாட்டியதாக அவரோடு தங்கியிருந்த நண்பர்கள் பின்னர் பேட்டி அளித்துள்ளனர்.
1978ஆம் ஆண்டு ப ப்பில் சென்று மது அருந்தினார் நீல்சன். அங்கு அவர் சந்தித்த இளைஞர் சுவாரசியம் ஊட்ட, அவரை தன் வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவரை டையில் கழுத்தில் கட்டிக் கொன்றார். பின்னர் அவரை நீரில் முக்கி உடலை தூய்மைப்படுத்தினார். உடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி, தடவிப் பார்த்தார். பின்னர் அந்த உடலுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள முயன்றார். மிஷன் இம்பாசிபிள் ஆனது அம்முயற்சி. உடனே, அந்த உடலை பக்கத்தில் போட்டு நிம்மதியாக படுத்து தூங்கினார். பின்னர், அந்த உடலை எரித்து சாம்பலாக்கிவிட்டார். எரிப்பதற்கு முன்னர், ஏழு மாதங்கள் அந்த உடலை வீட்டிலேயே வைத்திருந்தார்.
அடுத்தடுத்த ப ப்களில் ஆள் தேடி கூட்டி வந்து வல்லுறவு செய்து பின்னர், கொன்றார். இவர்களின் உடல்களை வீட்டின் கீழ் தரைப்பலகைகளை அகற்றி கீழே போட்டு வைத்திருந்தார். தான் செய்த சில்மிஷங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து வைத்திருந்தார். பன்னிரண்டு பேர்களை கொன்று முடித்தார். அதற்குள் ஒளித்து வைத்த உடல்களில் ஈ முட்டையிட்டு குஞ்சு பொரிக்கத் தொடங்கியது. நாற்றம் குடலைப் பிடுங்குகிறது என பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் சொன்னார்கள். அதற்கு கட்டிடம் பழசானதுதான் காரணம் என சமாளித்தார் நீல்சன். மேலும் சமாளிக்க முடியாது என்ற புரிந்தவர், உடலை வேக வைத்து சதைகளை தனியாக தோட்டத்தில் எரித்தார். கொன்றவர்களின் உடல்களை பெரும்பாலும் எரித்துவிட்டார். எலும்புகளைக்கூட. போலீசார் பின்னாளில் தேடியபோது மிகச்சில எலும்பு மிச்சங்கள்தான் கிடைத்தன.
நீல்சன் செய்த குற்றம், உடல் உறுப்புகளை வெட்டி டாய்லெட்டில் போட்டதுதான். திடீரென அவர் வாழ்ந்த இடத்தில் கழிவுநீர் குழாய் அடைத்துக்கொண்டது. அதனை பழுது பார்த்தவர், உடல் உறுப்புகளைக் கண்டு அதிர்ந்தார். அவர் உடனே போலீசுக்கு போன் செய்ய, அவர்கள் அதனை ஆராய்ந்தனர். சிலர் உடனே கூட்டிக்கழித்துப் பார்த்து, நீல்சனை சந்தேகப்பட்டனர். அவர் அறைக்கு வந்த போலீஸ்காரர், முகம் சுளித்தார். அப்படியொரு அழுகல் வாடை அடித்தது. நீல்சன் குற்றம் பற்றிக்கேட்டதும் தான்தான என பெருமையாக ஒப்புக்கொண்டார். எப்படி கொலை செய்தேன் என்பதையும் தினத்தந்தி கட்டுரை போல ஒப்பித்தார்.
பின்னர், பாலிதீன் பையில் போட்டு வைத்த உடல் உறுப்புகள் அவரை மாட்ட வைத்தன. குற்றத்தை ஒப்புக்கொண்டார். பதினைந்து பேரை கொன்ற குற்றத்திற்காக ஆயுள்தண்டனை கிடைத்தது. 2018ஆம்ஆண்டு சிறையில் இறந்துபோனார் நீல்சன்.
தொகுப்பு - கேசவ் நரன்
நன்றி - பயோகிராபி வலைத்தளம்.