ஆங் சன் சூகி மீது தொடங்குகிறது ஐ.நா வழக்கு!




Image result for aung san suu kyi caricature
honghong free press



2017ஆம் ஆண்டு மியான்மரில் உள்ள ரோஹிங்கிய முஸ்லீம்கள் மீது பௌத்தர்கள் தீவிர இன அழிப்பு செயல்முறைகளை செயல்படுத்தினர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. வாழ்வதற்கான சூழ்நிலை இல்லாத அம்மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். இவர்களின் எண்ணிக்கையை மியான்மர் அரசு, 5 லட்சம் என்கிறது. ஆனால் வங்கதேசத்திற்கு அகதியாக வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் ஆகும்.


2018ஆம் ஆண்டு மியான்மரில் முஸ்லீம்கள் மீது நடந்த ராணுவ வன்முறை மற்றும் அரசின் நடவடிக்கைகள் பற்றி செய்தி எழுதிய இரு ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தது அந்நாட்டு அரசு. இதைப்பற்றி மூச்சு கூட விடாமல் இருந்தார் அந்நாட்டின் பிரமரான ஆங்சன் சூகி. இதன்விளைவாக அவரின் மீது உலகம் கொண்ட அபிமானமே தகர்ந்து போனது.

இதனால் கனடா அரசு சூகிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும் மனித உரிமைக்கு பாடும் ஆம்னெஸ்டி அமைப்பும் தான் முன்னர் அமைதிக்காக பாடுபடும் வகையில் சூகிக்கு கொடுத்த உயர்ந்த விருதை திரும்ப பெறுவதாக அறிவித்து விட்டது.  வரும் டிச. 10-12 தேதிகளில் ஐ.நா வழக்கில் ரோஹிங்கியா முஸ்லீம்களை அழித்தொழிக்க முயன்ற வழக்கில் அவர் ஆஜராக உள்ளார்.


57க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்காக களமிறங்கியதால் ஐ.நா இப்பிரச்னையை வழக்காக பதிவு செய்து விசாரிக்க உள்ளது.


நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ்