பாலியல் சந்தோஷம் மனிதர்களுக்கு மட்டும்தானா?
giphy |
மிஸ்டர் ரோனி
செக்ஸை மனிதர்கள் சந்தோஷத்திற்காக நாடுவது உண்டு. பிற விலங்கினங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது உண்டா?
ஆடியோ பார்னோகிராபி வந்துவிட்ட காலத்தில் இப்படி ஒரு சந்தேகமான கேள்வி. அப்படி விலங்குகளும் உலகில் உண்டு. இறைவன் கொடுத்த உறுப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டுமே? இல்லையெனில் சாமிக்குத்தம் ஆகிவிட்டால் என்ன செய்வது?
போனபோஸ் எனும் சிம்பன்சி இனத்தில் இதுபோன்ற சில்மிஷ சந்தோஷ அனுபவங்கள் உண்டு. இவை சந்தோஷத்திற்காக நிகழ்கிறதா என்று இன்னும் ஆராய்ச்சிகள் முழுமையாக நமக்கு விளக்கவில்லை. இந்த குரங்குகள் கர்ப்பம் தரித்தபோதும், பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போதும் செக்ஸ் உறவு கொண்டு மகிழ்கின்றன. எதற்கு என ஆராய்வது வேண்டாம். சந்தோஷம் தானே முக்கியம்?
இதைப்போலவே டால்பின்களும், ஜப்பானிய மக்காவ் வகை குரங்குகளும் செக்ஸ் அனுபவத்தை விமரிசையாக அனுபவிக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் சொன்ன தகவல்.
நன்றி - பிபிசி