விடாது துரத்தும் காமவெறி - பெட்ரோ லோபெசின் அவல வாழ்க்கை!





Image result for pedro lopez
கொலை அணிவகுப்பு



அசுரகுலம்

பெட்ரோ லோபெஸ்

கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற சாதனையாளர். 1948ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அம்மா, விலைமாதாக இருந்தார். மொத்தம் பதிமூன்று பிள்ளைகள். அதில் எட்டாவது ஆள், லோபெஸ். சிறுவயதில், தன் சகோதரியின் மார்பை பிடித்து விளையாடியதை அம்மா பார்த்து வெறியானார். மகனை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன்பிறகு அவனை தன் மகனாக அங்கு சேர்த்துக்கொள்ளவில்லை. அதன் விளைவை பின்னர் சமூகம் அனுபவித்தது.

தெருவுக்கு வந்தவர் என்ன செய்வார்கள்? அதேதான் கைகளை ஏந்தி பிச்சை எடுக்கத் தொடங்கினார். அப்போது சிரித்தமுகமாக குழந்தைகளுக்கு உதவுவதாக வாலிபர் ஒருவர் வந்தார். லோபெசுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்தார். ஆனால் பதிலுக்கு லோபெஸை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தார் கருணை வாலிபர். எரிச்சலான லோபெஸ், அந்த காப்பகத்திலிருந்து சிறுமிகள் மீது பாய்ந்து வேட்டையாடினார். ஓநாயைப் பார்த்து ஆடு மிரள்வது போல பீதியான சிறுமிகள் புகார் கொடுத்தால், இனிமேல் அப்படி நடந்துகொள்ளமாட்டேன். சாமி சத்தியமாக என்று சர்க்கரை பொங்கலாக பேசுவார் லோபெஸ். நடைமுறையில் நம்மூர் ஆட்களைப் போலத்தான். எதையும் கண்டுகொள்ளாது சோலி பார்த்துக்கொண்டிருந்தார்.


பின் இவரைப் பார்த்து மற்றொரு தம்பதி பரிதாபப்பட்டு  த த்து எடுத்து வளர்க்க நினைத்தனர். பள்ளியில் சேர்த்தனர். எல்லாம் நன்றாகத்தான் நடந்த து. ஆனால் விதி சும்மா விடுமா? அங்குள்ள ஓர் ஆசிரியர், லோபெசைப் பார்த்து கண்ண டித்தார். காம அழைப்பு விடுத்தார். பயன்படுத்திக்கொண்டார். இதனால் லோபெஸ் இந்த வேலையே வேண்டாம் என வீட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தெருவுக்கே வந்துவிட்டார். சின்ன திருட்டுகளை பார்ட் டைமிலும், ஃபுல் டைமாக பிச்சை எடுப்பதையும் வைத்துக்கொண்டிருந்தார். ஆண்டவன் கொடுத்த அறிவைப் பயன்படுத்தி, கார் திருட கற்றார். கார்களை திருடி பிரித்து விற்றதில் செம காசு பார்த்தார். இதனால் பனிரெண்டு வயதில் தெருவுக்கு வந்தவர், பதினெட்டு வயதில் திருட்டை சிறப்பாக கற்றுத் தேர்ந்தார். போலீஸ் அவரை சரியான பிளான் போட்டு அமுக்கியது.

சிறைக்கும் சென்றவரை அங்குள்ள ஒரினச்சேர்க்கையாளர்கள் டீம் வெறுப்பேற்றியது. அவரைப் பார்த்து கிளர்ச்சியான நான்குபேர் டீம் அவரை வல்லுறவு செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. அமைதியாக அதனைப் பொறுத்துக்கொண்ட லோபெஸ் கிடைத்த வாய்ப்பில் நான்கில் மூன்றுபேரை போட்டுத்தள்ளினார். பழிக்குப்பழிதான். தற்காப்பு என்று சொன்னாலும் நீதிமன்றம் கேட்கவில்லை. மேலும் இரண்டு ஆண்டுகள் கூடுதல் சிறைதண்டனை கிடைத்தது. அதன் விளைவை சமூகம் மறக்கமுடியாதபடி செய்தார் லோபெஸ் . அதற்குள்ளாகவே சிறையில் பெண்கள் மீதான கோபத்தையும் தான் இந்நிலைக்கு ஆளாக காரணமான தாயின் மீதும் வன்மத்தை உருவாக்கிக்கொண்டார்.

Image result for pedro lopez


1978ஆம் ஆண்டு சிறை மீண்ட லோபெஸ், பெரு நாட்டிற்குச் சென்றார். அங்கு பெரு சிறுமிகளை கற்பழித்து தீர்த்து கட்டினார். இதைப் பார்த்த இந்தியர்கள் குழு, அவரை அடித்து உதைத்து மணலில் கழுத்து வரை புதைத்துவிட்டு சென்றது. ஆனால் கவலையேபடவில்லை லோபெஸ்,. ஈகுவடார் சென்றார், அங்கும் கற்பழிப்பு கொலை ஆட்டம்தான். அங்குள்ள ஊழல் அதிகாரிகள் பெண்கள் காணாமல் போவது விபச்சாரத்திற்குத்தான் என கமிஷனை கூடுதலாக கேட்டுவிட்டு பழபஜ்ஜி ஆர்டர் செய்து காத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு வெள்ளம் ஏற்பட்டது. நான்கு சிறுமிகளின் உடல்கள் கரை ஒதுங்கின. அதில்தான் லோபெஸ் மாட்டிக்கொண்டார். அவரை குற்றங்களை ஒத்துக்கொள்ள வைக்கணுமே? பாதிரியாருக்கு கைதி வேசம் போட்டு சிறையில் தங்க வைத்தனர். யாருக்கே தான் செய்த சாதனைகளை யாரிடமாவது சொல்லவேண்டுமென்ற அரிப்பு இருக்கும். அதனை போலீஸ் பயன்படுத்திக்கொண்டது. அத்தனை குற்றங்களையும் சக கைதியான பாதிரியிடம் சொல்லிவிட்டார் லோபெஸ்.


வின்சென்ட் காபோ

நன்றி - கில்லர்ஸ் புக். தாட்.கோ