இடுகைகள்

இதயத்துடிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பயம் ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா?

படம்
பயப்படும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது? நாம் பிறந்த தில் இருந்து நம்மை அடையாளம் காட்டுவதாக இருப்பது ஒலிதான். அது அழுகையாக, வீறிடலாக முதலில் இருக்கிறது. பின்னர், அது சூழலைப் பொறுத்து மாறுபட்டு ஏற்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் உடைந்து அழுவது கிடையாது. பெண்கள் அழாமல் இருக்க வைப்பது சிரமம். பொதுவாக அபாயத்தை பார்த்து ஏற்படும் அலறல் சத்தம் மூளையிலுள்ள அமிக்டலா பகுதியை உசுப்புகிறது. இதன் விளைவாக உடல் முழுக்க அந்த அபாயத்திலிருந்து தப்ப வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. இதனை எப்படி உணர்வீர்கள்? பாம்பு, தேள் போன்ற கொல்லும் அல்லது கடுமையாக வலி ஏற்படுத்து உயிரிகளை அருகில் பார்த்தால் உடல் தன்னிச்சையாக தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஒரே விஷயம்தான் தோன்றும். அந்த இடத்திலிருந்து காயம்படாமல் நாம் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அது. இப்போது உடலின் உறுப்புகளுக்குள் ஏற்படும் மாற்றம் பற்றி பார்ப்போம். கண்கள் கண் பார்வையின் திறன் கண்ணாடி போட்டிருந்தாலும் அதிக விழிப்பாக மாறும். உயிர் பிழைக்க வேண்டுமே? இதனால் நீங்கள் பார்க்காத கவனி

நலம் தேடும் கேட்ஜெட்ஸ் 2019 (ஜூன்)

படம்
மார்க்கெட்டுக்குப் புதுசு! Hexoskin Smart Shirts டிஷர்ட்கள் மற்றும் மார்பில்  பயன்படுத்தும் உடை. இதில் உள்ள ட்ராக்கர் இதயத்திலுள்ள துடிப்புகளை பதிவு செய்யும் திறனுடையது. மூச்சுக்களின் அளவு, இசிஜி, உடற்பயிற்சியின் அளவு ஆகியவையும் இதில் பதிவு செய்யப்படுகிறது.  Suunto 9 சுன்டோ 9 என்பது ஜிபிஎஸ் மற்றும் தொலைவைக் கணக்கிடுதல், பல்வேறு விளையாட்டுகளுக்கேற்ப செட்டிங்  ஆகிய வசதிகள் இதில் உண்டு.  COROS PACE இதுவும் அத்லெட்டுகளுக்குத்தான். கையில் மாட்டினாலும் இதயத்துடிப்புகளை கணிக்கும். எப்போதும்போல ஜிபிஎஸ் உண்டு. நீங்கள் தூங்கினாலும் இந்த வாட்ச் கண்விழித்து உங்களைக் கண்காணிக்கும். இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது ஆப்ஷன்கள் குறைவுதான். Epicore Biosystems Microfluidic Sensor கையில் ஒட்டிக்கொள்ளும் சென்சார், வியர்வை மூலம் இதயத்துடிப்பு, உடலில் வியர்வை மூலம் வெளியாகும் எலக்ரோலைட் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. இந்த சென்சார் இன்னும் ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளில் உள்ளது. ஆனாலும் டிரையல்களில் அசத்துகிறது என்பதுதான் நம் கருத்து. நன்றி: பிபிசி