இடுகைகள்

தொன்மைக் கட்டிடங்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வளர்ச்சிக்கு பலியாகும் இந்தியாவின் கலாசார தொன்மை!

படம்
வளர்ச்சிக்கு பலியாகும் தொன்மை கட்டிடங்கள்! – அலங்கார கதவுகள், வேலைப்பாடு ஜன்னல்கள், ரெட் ஆக்சைடு தரைகள், நுட்ப வேலைப்பாடு கொண்ட தூண்கள் என தொன்மை கலாசார கட்டிடங்கள் இந்தியா முழுவதும் எந்த மன உறுத்தலுமின்றி முற்றாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் விண்ணுயர்ந்த   பிளாட்டுகளும், வில்லாக்களும் எழும்பி வருகின்றன. மும்பையிலுள்ள ஆர்.கே ஸ்டூடியோ, கொல்கத்தாவின் கெனில்வொர்த் ஹோட்டல், ஸ்ரீநகரிலுள்ள அரசியல் தலைவர் ஷேக் அப்துல்லாவின் வீடு, டெல்லியின் ஹால் ஆஃப் நேஷன் என அடுத்தடுத்த மாதங்களில் அழிக்கப்படவிருக்கும்   தொன்மையான இடங்களின் எண்ணிக்கை நீண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் தங்களின் கலாசாரத்தை பாதுகாக்க, மீட்கவும் அரும்பாடுபடும்போது இந்தியாவில் ஏன் அந்த எண்ணம் இல்லை? “இந்தியர்களில் பெரும்பாலானோர் இன்ஸ்டன்ட் வாழ்வுக்கு ஏங்கி கலாசார அடையாளங்களை இழந்துவருகின்றனர். தனித்துவம் இல்லாமல் வானுயர்ந்து நிற்கும் கான்க்ரீட் சுவர்கள் பெரும் மனத்துயரை ஏற்படுத்துகின்றன” என்கிறார் ஆர்க்கிடெக்ட்டான சங்கீதா கபூர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அமெரிக்காவின் லைஃப்ஸ்டைலுக்கு மாறி கட்