இடுகைகள்

ஐசக் பாஷவிஸ் சிங்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யூதமக்களின் வாழ்க்கையை உலகப்போர் பின்னணியில் அங்கதமாக விவரிக்கும் நாவல்! ஷோஷா - ஐசக் சிங்கர்

படம்
  ஷோஷா ஐசக் பாஷாவிஸ் சிங்கர் தமிழில் கமலக்கண்ணன் போலந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஐசக் பாஷாவிஸ் சிங்கர் இத்திய மொழியில் எழுதிய நாவல். தமிழில் கமலக்கண்ணன் வெகு சிரத்தையெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்.   போலந்து நாட்டில் உள்ள யூதக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரோன் கிரடிங்கர். இவர்கள் யூத மத ராபி குடும்பம். இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆரோன், இன்னொரு மதம் சார்ந்த பஷிலி – செல்டிக் ஆகியோரின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறான். பஷிலியின் பெண்தான் ஷோஷா. இவள் புத்திசாலி கிடையாது. ஆனால் ஆரோன் சொல்லும் கதைகளையெல்லாம் பொறுமையாக கேட்பவள். ஆரோனுக்கு மிக நெருக்கமான அவனை கிண்டல் செய்யாத தோழி, அவள் மட்டுமே. ஆரோன் தனது அப்பா படிக்க கூடாது என்று சொல்லும் நூல்களை படித்துத்தான் தனது இலக்கிய வாழ்வை தொடங்குகிறான். அவர்களது குடும்பம் பிழைக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. ஆரோனின் தம்பி யூத மத வழக்கப்படி ராபி ஆகிறான். ஆனால் ஆரோன் இலக்கியவாதியாக எழுத்தாளனாகிறான். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் எழுதிய நூல்களின் ராயல்டிக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும் நிலை. போலந்திலும் கூட அப்படித்