இடுகைகள்

புதிய தலைமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைய தலைமுறையினர் சேமிக்கிறார்களா?

படம்
pixabay பூமர், ஜென் இசட் ,மில்லியனிய ஆட்கள் என அனைவரையும் இணைப்பது பணம்தான். ஆம். இவர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை. இன்று இயர்போன் மாட்டாத இளைஞர்களை நீங்கள் எங்கும் தேடித்தான் பிடிக்கவேண்டும். அதேபோலத்தான் அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவும். ஜியோவை சல்லீசு ரேட்டில் வாங்கி அளவில்லாத இணையத்தை நுகர்பவர்கள், தனக்கான நலன்களையே முக்கியமாக கருதுகிறார்கள். சமூகத்தை இணையத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்கள். இந்த விவகாரங்கள் எப்படியோ, ஆனால் கல்யாணம் ஆகி ஹீரோ பைக் வாங்கி செட்டில் ஆகும் விஷயத்தில் எந்த மாற்றமுமில்லை. பூமர் முதல் மில்லியனிய ஆட்கள் ஆட்கள் வரை காசு சேர்ப்பதிலும், அதனை முதலீடு செய்வதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இதில் ஜென் இசட் ஆட்கள் கில்லி என்கிறார் வலைத்தளத்தில் நிதி மேலாண்மை பற்றி எழுதி வரும் லாவண்யா மோகன். இவருக்கு எப்படி நிதிமேலாண்மை பற்றி பிறருக்கு சொல்வதில் ஆர்வம் வந்தது? என்று கேட்டோம். எங்கள் வீட்டில் செய்யும் செலவுகள், வருமானம் பற்றி சுதந்திரமாக பேசுவார்கள். இதன் அடிப்படையில்தான் நான் பொருளாதாரம் பற்றி எழுதத் தொடங்கினேன

மாலனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? - அந்திமழை வெளியீடு

படம்
எந்த இடத்தையும் அடைய அல்ல , சும்மா நடக்கவே விரும்புகிறேன் மாலன் அந்திமழை மூத்த பத்திரிகையாளரான மாலனை, அந்திமழை இளங்கோவன் அடையாளம் கண்டு  நேர்காணல் செய்துள்ளார். அவரின் முன்னாள், இந்நாள் எதிர்கால திட்டங்களை இந்த நூலில் நாம் நிதானமாக வாசித்து அறிய முடிகிறது. வங்கி அதிகாரியின் மகனாக பிறந்த மாலன், பின்னாளில் குங்குமம், தினமணி, இந்தியா டுடே, குமுதம், புதிய தலைமுறை, சன் டிவி என பல்வேறு ஊடகங்களில் சாதித்தவர். பல்வேறு புதிய முயற்சிகளை திறம்பட செய்தவர். இன்று மாலன் சமூக வலைத்தளங்களில் எழுதும் விஷயங்களின் சார்பு நிலை பற்றிய குறிப்பும் இந்த நூலில் ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. அது சரியா, தவறா  என்பது வாசிப்பவர்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். மாலனின் பாரதி பாசம், தினமணியில் செய்த மாற்றங்கள். அதன் கேப்ஷனை வடிவமைத்தது என நுணுக்கமான தகவல்கள் இதில் நிறைந்துள்ளன. குங்குமத்தில் சாவியின் நட்பு, திசைகளின் தொடக்கம், அதில் செய்த புதுமைகள், சுஜாதாவுடனான நட்பு,  திசைகளின் அட்டைப்பட மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்தியா டுடே பத்திரிகையில் செய்திகளோடு சிறுகதைகளும் கொண