இளைய தலைமுறையினர் சேமிக்கிறார்களா?



Close-up Photography Two Brown Cards
pixabay




பூமர், ஜென் இசட் ,மில்லியனிய ஆட்கள் என அனைவரையும் இணைப்பது பணம்தான். ஆம். இவர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை. இன்று இயர்போன் மாட்டாத இளைஞர்களை நீங்கள் எங்கும் தேடித்தான் பிடிக்கவேண்டும். அதேபோலத்தான் அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவும். ஜியோவை சல்லீசு ரேட்டில் வாங்கி அளவில்லாத இணையத்தை நுகர்பவர்கள், தனக்கான நலன்களையே முக்கியமாக கருதுகிறார்கள்.

சமூகத்தை இணையத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்கள். இந்த விவகாரங்கள் எப்படியோ, ஆனால் கல்யாணம் ஆகி ஹீரோ பைக் வாங்கி செட்டில் ஆகும் விஷயத்தில் எந்த மாற்றமுமில்லை. பூமர் முதல் மில்லியனிய ஆட்கள் ஆட்கள் வரை காசு சேர்ப்பதிலும், அதனை முதலீடு செய்வதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இதில் ஜென் இசட் ஆட்கள் கில்லி என்கிறார் வலைத்தளத்தில் நிதி மேலாண்மை பற்றி எழுதி வரும் லாவண்யா மோகன்.


இவருக்கு எப்படி நிதிமேலாண்மை பற்றி பிறருக்கு சொல்வதில் ஆர்வம் வந்தது? என்று கேட்டோம். எங்கள் வீட்டில் செய்யும் செலவுகள், வருமானம் பற்றி சுதந்திரமாக பேசுவார்கள். இதன் அடிப்படையில்தான் நான் பொருளாதாரம் பற்றி எழுதத் தொடங்கினேன். வங்கியில் கணக்கு தொடங்கி சேமிக்கத் தொடங்கினேன். குழந்தைகளுக்கு வங்கியில் கணக்கு தொடங்குவதோடு, அவர்கள் ஆர்டி முறையில் பணத்தை சேமிப்பது முக்கியம். இதுதான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக மாறும்.

டெலாய்ட் நிறுவனம் 2019ஆம் ஆண்டு இதுபற்றிய ஆய்வை மில்லியனிய ஆட்கள்,  ஜென் இசட் ஆட்களிடம் நடத்தியது. இதில் நிதி சேகரிப்பில் கறாராக இருப்பது ஜென் இசட் தான் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு 40 நாடுகளில் நடைபெற்றது.


வீட்டில் எதற்கு செலவிடுகிறார்கள் என்பதை அறிய காய்கறிகளை மளிகைப் பொருட்களை வாங்க அம்மா செல்லும்போது சென்றாலே போதும். இந்தப்பழக்கம் சிக்கனத்தை பழக்குவதோடு, உணவை வீணாக்கும் சிந்தனையும் குறையும்.  மாதாமாதம் செலவு செய்யும் பணத்தை எழுதி வைப்பது தேவையில்லாத செலவுகளைக் குறைக்கும். கல்லூரி படிக்கும்போது, கல்லூரி மாணவர்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கி கொடுப்பது முக்கியம். அதில் அவர்கள் வேலைக்குச்  சென்று சம்பாதிக்கும் பணத்தைப் போட்டு வைக்கலாம்.

இளைஞர்கள் நிறைய  செலவழிக்கிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. இதைக்குறைக்க மூன்று கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும் . என்னுடைய தேவை என்ன? தேவையை நான் வாங்கும் அப்பொருள் தீர்க்குமா? அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?  என எளிமையான கேள்விகளைக் கேட்டுக்கொண்டால் செலவுகள் குறையும். சேமிப்பு பெருகும். அதை பல்வேறு செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம்.

நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் - வைஷாலி விஜயகுமார்